Chicken Pakoda Recipe
பொதுவாக நாம் அனைவருக்கும் ஈவ்னிங் டைம் வந்தாலே ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதுவும் மழை காலம் வந்தால் போதும் சூடான மொறு மொறு பக்கோடா சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்றும் தோன்றும். இவ்வாறு தோன்றிய உடன் நாம் அனைவரும் வெங்காய பக்கோடா, காலிபிளவர் பக்கோடா மற்றும் ராகி பக்கோடா என்று இதுபோன்ற ஒரே ரெசிபியினை செய்து சாப்பிட்டு இருப்போம். அதனால் இன்று கொஞ்சம் வித்தியாசமான பக்கோடா வகை ஒன்றினை பற்றி பார்க்கபோகிறோம். அப்படி என்ன வித்தியாசமான பக்கோடா என்று தானே யோசிக்குறீர்கள். அது வேறு ஒன்றும் இல்லை சிக்கன் பக்கோடா தான். அது எப்படி சிக்கனில் பக்கோடா செய்வது என்று தானே நினைக்குறீர்கள். நாக்கில் சுவை என்றும் இருக்கும் அளவிற்கு அசத்தலான சுவையில் சிக்கன் பக்கோடா செய்யலாம். சரி வாருங்கள் சிக்கன் பக்கோடா செய்முறையினை தெரிந்துக்கொள்ளலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
சிக்கன் பக்கோடா செய்ய தேவையான பொருட்கள்:
- எலும்பு இல்லாத சிக்கன்- 1/2 கிலோ
- மிளகாய் தூள்- 2 ஸ்பூன்
- மல்லித்தூள்- 1 ஸ்பூன்
- சீரகத்தூள்- 1 ஸ்பூன்
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1/2 ஸ்பூன்
- பச்சை மிளகாய்- 2
- வெங்காயம்- 1
- கடலை மாவு- 2 ஸ்பூன்
- அரிசி மாவு- 1 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- தேவையான அளவு
- கறிவேப்பிலை- சிறிதளவு
Recipes👇👇 மட்டனில் கிரேவி செய்து சாப்பிட்ருப்பீர்கள்.. ஆனால் இந்த மாதிரி குருமா செய்து சாப்பிட்ருக்கீர்களா..
சிக்கன் பக்கோடா செய்முறை:
முதலில் எலும்பு இல்லாத 1/2 கிலோ சிக்கனை வாங்கி நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு சுத்தம் செய்த சிக்கனை மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக பேஸ்ட் ஆக அரைத்துக்கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் சிறு சிறு துண்டாக நறுக்கி வைத்து கொள்ளலாம். இந்த இரண்டில் எது வேண்டுமானாலும் உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து கொள்ளுங்கள்.
இப்போது எடுத்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் இரண்டினையும் நன்றாக அலசிவிட்டு பொடி பொடியாக நறுக்கி வைத்து கொள்ளுங்கள்.
அடுத்ததாக ஒரு பவுலில் தயார் நிலையில் வைத்துள்ள சிக்கனை சேர்த்து அதனுடன் எடுத்து வைத்துள்ள மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் சீரக தூளினை சேர்த்து 2 நிமிடம் நன்றாக ஒன்றோடு ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்.
2 நிமிடம் கழித்த பிறகு பவுலில் உள்ள சிக்கனுடன் எடுத்துவைத்துள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட், தேவையான அளவு உப்பு, கடலை மாவு, அரிசி மாவு மற்றும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சிறிதளவு இவற்றை அனைத்தினையும் சேர்த்து நன்றாக கலந்து ஒரு 5 நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள்.
5 நிமிடம் கழித்து ஒரு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் பவுலில் உள்ள சிக்கன் பீஸினை பக்கோடா போல அதில் போட்டு நன்றாக பொன் நிறமாக வந்தவுடன் வேக வைத்து எடுத்தால் போதும் மொறு மொறு சிக்கன் பக்கோடா ரோட்டுக்கடை சுவையில் தயார்.
இதேபோல் மற்ற சிக்கனையும் எண்ணெயில் போட்டு எடுத்துக்கொள்ளுங்கள்.
Recipes👇👇 மீன் குழம்பு வைத்து சாப்பிட்டுருப்பீர்கள்..ஆனால் மீன் குருமா சாப்பிட்ருக்கீர்களா..
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |