சிக்கன் உப்பு கறி செய்வது எப்படி?

Advertisement

Chicken Uppu Kari in Tamil

பிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்.. சிக்கன் என்றாலே பெரும்பாலானவர்களுக்கு மிகவும் பிடிக்கும். இந்த சிக்கனில் ஒரே விதமான உணவுகளை செய்து போர் அடிச்சிடிச்சின்னா ஒரு முறை இந்த சிக்கன் உப்பு கறி ரெசிபியை செய்து பாருங்கள் டேஸ்ட் சும்மா அப்படி இருக்கும். இந்த ரெசிபி செய்ய அதிக மசாலா பொருட்கள் சேர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை மிக எளிதாக நமது வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்துவிடலாம் சரி வாங்க அது என்னென்ன பொருட்கள், எப்படி செய்யலாம் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள்:

  1. நல்லெண்ணெய் – மூன்று டேபிள் ஸ்பூன்
  2. சோம்பு – ஒரு ஸ்பூன்
  3. கருவேப்பிலை – இரண்டு கொத்து
  4. காய்ந்த மிளகாய் – 15 (கிழியாது)
  5. சின்ன வெங்காயம் 150 கிராம் (பொடிதாக நறுக்கியது)
  6. பூண்டு – 10 பல் (இடித்தது)
  7. இஞ்சி – ஒரு பெரிய துண்டு (இடித்தது)
  8. தூள் உப்பு – ஒரு டீஸ்பூன்
  9. மஞ்சள் – 1/2 ஸ்பூன்
  10. சிக்கன் – 3/4 கிலோ
  11. சீரகம் தூள் – ஒரு ஸ்பூன்
  12. மிளகு தூள் – ஒரு ஸ்பூன்
  13. எலுமிச்சை பழம் சாறு – 1/2 மூடி
  14. பொடிதாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பள்ளிபாளையம் சிக்கன் கிரேவி செய்வது எப்படி?

சிக்கன் உப்பு கறி செய்முறை – Chicken uppu kari recipe in tamil:chicken uppu kari

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் மூன்று டேபிள்ஸ்பூன் நல்லெணெய் ஊற்றவும்.

எண்ணெய் சூடானதும் ஒரு ஸ்பூன் சோம்பு, இரண்டு கொத்து கருவேப்பிலை மற்றும் 15 காய்ந்த மிளகாயை மூன்று துண்டுகளாக கிள்ளியதை சேர்த்து நன்றாக வதக்கவும்.

பிறகு அதனுடன் 150 கிராம் பொடிதாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின் அதனுடன் இடித்து வைத்துள்ள இஞ்சி மற்றும் பூண்டு இரண்டினையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்

உப்பு தேவையான அளவு மற்றும் மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன் சேர்த்து ஒரு இரண்டு நிமிடம் வதக்கவும்.

பின் 3/4 கிலோ சிக்கனை சேர்த்து ஒரு இரண்டு நிமிடம் வதக்கவும். பின் மூடி போட்டு அடுப்பை மீடியம் அளவில் தீயை வைத்து 10 நிமிடம் வதக்கவும். இடையில் ஒரு முறை கிளறிவிட்டுக்கோங்க.

10 நிமிடம் கழித்து திறந்து பாருங்கள் சிக்கனில் இருந்து நீர் பிரிந்து வந்திருக்கும், இப்பொழுது சிக்கன் ஒரு அரை பாகம் வெந்திருக்கும். இப்பொழுது ஒரு முறை நன்றாக கிழவிடுங்கள், பின் அதனுடன் ஒரு ஸ்பூன் சீரகம் தூள் சேர்த்து நன்றாக கிளறி மீண்டும் 10 நிமிடம் வேகவைக்கவும்.

10 நிமிடம் கழித்து சிக்கனை திறந்து பார்த்தால் சிக்கனில் உள்ள தண்ணீர் அனைத்தும் ஓரளவு வற்றி இருக்கும். இப்பொழுது ஒரு ஸ்பூன் மிளகு தூள் சேர்த்து இரண்டு நிமிடம் கிளறிவிடுங்கள்.

பின் அதனுடன் 1/2 முடி எலுமிச்சை பழம் சாறினை பிழிந்து ஊற்றி சிக்கனை மீண்டு இரண்டு நிமிடம் கிளறுங்கள் அவ்வளவு தான் சுவையான உப்பு கறி தயார் இறுதியாக இவற்றில் பொடிதாக நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி இலையை அவற்றில் தூவி இறக்கினால் போதும் சுவையான சிக்கன் உப்பு கறி தயார்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஆந்திர ஸ்பெஷல் கோங்குரா மட்டன் இப்படி ஒருமுறை செய்து சுவைத்து பாருங்க..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்!!!
Advertisement