தேங்காய் தயிர் சட்னி கேட்பதற்கு மட்டும் கிடையாது டேஸ்ட்டிலும் அருமையாக இருக்கும்..!

Advertisement

தேங்காய் தயிர் சட்னி | Coconut Curd Chutney Recipe

நாம் அனைவரும் இட்லி மற்றும் தோசை என்றால் அதிகமாக சட்னியினை தான் தொட்டு சாப்பிடுவோம். அந்த வகையில் வாரத்திற்கு 1 அல்லது 2 முறை சாம்பார் அல்லது குருமா என இதுபோன்ற ரெசிபிக்களை சாப்பிட்டு இருப்போம். ஆனால் எப்போதும் செய்வது என்றால் தேங்காய் சட்னி, மிளகாய் சட்னி, புதினா, கொத்தமல்லி, கடலை மற்றும் முள்ளங்கி என இதுபோன்ற ஒரே மாதிரியான சட்னி ரெசிபிகளை சாப்பிட்டு இருப்போம். இத்தகைய சட்னி வகைகளை எத்தனை நாட்கள் தான் சாப்பிடுவீர்கள். அதனால் இன்று தேங்காய் வைத்து செய்யக்கூடிய தேங்காய் தயிர் சட்னி செய்வது எப்படி என்பதற்கான செய்முறையினை தான் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தேங்காய் தயிர் சட்னி செய்ய தேவைப்படும் பொருட்கள்:

  • தேங்காய்- 1 மூடி
  • தயிர்- 1/2 கப்
  • இஞ்சி- சிறிய துண்டு
  • பச்சை மிளகாய்- காரத்திற்கு ஏற்ற அளவு
  • கடுகு- 1 ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு- 1 ஸ்பூன்
  • உப்பு- தேவையான அளவு
  • எண்ணெய்- 1 ஸ்பூன்
  • கறிவேப்பிலை- தேவையான அளவு

கருணைக்கிழங்குல அட்டகாசமான சட்னி அதுவும் 10 நிமிடத்தில் செய்யலாம் வாங்க 

தேங்காய் தயிர் சட்னி செய்முறை:

முதலில் எடுத்துவைத்துள்ள தேங்காயினை துருவி வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு 1/2 கப் தயிரினை தண்ணீர் சேர்க்காமல் நன்றாக மிக்கி ஜாரில் சேர்த்து அரைத்து ஒரு பவுலில் வைத்து விட வேண்டும்.

 thengai தயிர் chutney seimurai

அதன் பிறகு எடுத்துவைத்துள்ள பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் துருவிய தேங்காய் என இவை அனைத்தினையும் மிக்சி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு சட்னி பதத்திற்கு அரைக்க வேண்டும்.

அடுத்தப்படியாக ஒரு பவுலில் அரைத்த தேங்காய் பேஸ்ட் மற்றும் அரைத்த தயிர் சேர்த்து அதற்கு தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்துகொள்ளவும்.

இப்போது அடுப்பில் ஒரு கடாயினை வைத்து அதில் 1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்த பிறகு 1 ஸ்பூன் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து பொரிய விடுங்கள்.

தேங்காய் தயிர் சட்னி செய்முறை

கடைசியாக கடாயில் உள்ள பொருட்கள் பொரிந்த பிறகு கலந்து வைத்துள்ள சட்னி கலவையினை இதில் சேர்த்து கறிவேப்பிலை தூவி விட்டு சூடு வந்ததும் இறக்கினால் போதும் தேங்காய் தயிர் சட்னி 10 நிமிடத்தில் தயார்.

இத்தகைய சட்னியினை நீங்கள் இட்லி, தோசைக்கு சைடிஷாக தொட்டு சாப்பிட்டு பாருங்கள் டேஸ்ட் சும்மா அள்ளும்.

ஒரு நிமிடத்தில் இட்லி தோசைக்கு சூப்பரான சட்னி.  வறுத்து அரைக்க வேண்டியதில்லை 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement