Coconut Laddu Recipe in Tamil
பொதுவாக நாம் அனைவருக்குமே உணவு என்பது மிக மிக முக்கியமான ஒன்று ஆகும். அதனால் அதனை நாம் பார்த்து பார்த்து ரசித்து ருசித்து சாப்பிடுவோம். அதிலும் ஒரு சிலருக்கு தினமும் ஏதாவது ஒரு புது வகையான உணவினை சாப்பிட வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் இருக்கும். அதனால் அவர்கள் அனைத்து வகையான உணவுகளையும் தேடி தேடி சாப்பிடுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தினமும் நமது பதிவின் வாயிலாக ஒரு புதுமையான ரெசிபியை செய்வது எப்படி என்பதற்கான செய்முறை விளக்கங்களை பதிவிட்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் தேங்காய் லட்டு செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து இந்த ரெசிபியை ஒரு முறை செய்து சுவைத்து பாருங்கள்..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தேங்காய் லட்டு செய்வது எப்படி..?
நம்மில் பலருக்கும் இனிப்புகள் என்றால் மிக மிக பிடிக்கும். அதனால் இனிப்பு வகைகள் அனைத்தையும் சாப்பிட்டுவிட வேண்டும் என்று நினைப்போம். அதனால் தான் இன்று தேங்காய் லட்டு செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக காணலாம்.
தேவையான பொருட்கள்:
- தேங்காய்துருவல் – 2 கப்
- சர்க்கரை – 3/4 கப்
- பால் – 2 கப்
- நெய் – 4 டேபிள் ஸ்பூன்
- ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
- பாதாம் – 10
- பிஸ்தா – 10
- முந்திரி – 10
கோகுலாஷ்டமி ஸ்பெஷல் ஸ்ரீகந்த் இனிப்பு செய்வது எப்படி தெரியுமா
செய்முறை:
ஸ்டேப் – 1
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் நெய்யை சேர்த்து கொள்ளுங்கள். பிறகு அதில் 2 கப் தேங்காய்துருவலை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 2
பின்னர் அது நன்கு வதங்கிய உடன் 2 கப் பாலை சேர்த்து நன்கு வேகவைத்து கொள்ளுங்கள்.
இப்படி செஞ்சி கொடுங்க சுரைக்காய் பிடிக்காதவங்களும் கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க
ஸ்டேப் – 3
அடுத்து அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 3/4 கப் சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இப்பொழுது சர்க்கரை கரைந்து நீர்த்து காணப்படும். அதில் உள்ள தண்ணீர் எல்லாம் நன்கு உள்வாங்கும் வரையிலும் நன்கு வேகவிடுங்கள்.
ஸ்டேப் – 4
இறுதியாக அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள், 10 பாதாம், 10 பிஸ்தா மற்றும் 10 முந்திரி ஆகியவற்றை நன்கு நன்கு பொடி பொடியாக நறுக்கி சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
பின்னர் 1 மணிநேரம் நன்கு சூடினை ஆறவிடுங்கள். பிறகு அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி நன்கு கலந்து சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்தீர்கள் என்றால் நமது தேங்காய் லட்டு தயாராகிவிட்டது.
வாங்க சுவைக்கலாம்.. நிங்களும் இதனை உங்கள் வீட்டில் செய்து சுவைத்து பாருங்கள்.
சுண்டைக்காய் கூட்டினை இப்படி செஞ்சி சாப்புடுங்க கசப்பே தெரியாது
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |