Crispy Potato Snacks Recipe in Tamil
ஹலோ பிரண்ட்ஸ்..! பொதுவாக வீட்டில் இருக்கும் போது ஏதாவது ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அதிலும் குழந்தைகளை பற்றி சொல்லவே வேண்டாம். பள்ளியில் இருந்து வரும் போதே அம்மா இன்னக்கி என்ன ஸ்நாக்ஸ் என்று கேட்டுக்கொண்டே வருவார்கள். நாமும் தினமும் ஒரே மாதிரியாக ஸ்நாக்ஸ் செய்து கொடுத்து நமக்கும் அலுத்துபோயிருக்கும். அதனால் நம் பதிவில் உருளைக்கிழங்கை வைத்து மொறு மொறுனு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
மொறு மொறுனு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் செய்வது எப்படி..?
தேவையான பொருட்கள்:
- உருளைக்கிழங்கு – 3
- ரவா – 1/2 கப்
- கடலைமாவு – 1/2 கப்
- பெரிய வெங்காயம் – 1
- தக்காளி – 1
- கேரட் – 1
- கரமசாலா – 1 ஸ்பூன்
- சீரகத்தூள் – 1 ஸ்பூன்
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்
- பச்சைமிளகாய் – 4
- மஞ்சள் தூள் – சிறிதளவு
- எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்:
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து கொள்ளுங்கள். பின் அதில் 3 உருளைக்கிழங்கை தோல் நீக்கிவிட்டு சீவி எடுத்து கொள்ளுங்கள். பின் அதில் ரவா 1/2 கப் மற்றும் கடலைமாவு 1/2 கப் அளவிற்கு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து 15 நிமிடம் வரை மூடி வையுங்கள்.
உருளைக்கிழங்கு இருந்தால் போதும் 5 நிமிடத்தில் ஈவ்னிங் ஸ்னாக்ஸ்க்கு மொறு மொறுன்னு பக்கோடா ரெடி
காய்கறிகள் சேர்த்து கொள்ளவும்:
அடுத்து 1 பெரிய வெங்காயம், 1 தக்காளி, 1 கேரட் மற்றும் பச்சை மிளகாய் இவற்றை நன்றாக பொடிப்பொடியாக நறுக்கி பிசைந்து வைத்துள்ள மாவில் சேர்த்து கொள்ளவும். பின் அதில் கொத்தமல்லி இலையை பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள்.
மசாலா பொருட்கள் சேர்க்கவும்:
பின் அதில் கரமசாலா, மஞ்சள் தூள், சீரகத்தூள், இஞ்சிபூண்டு பேஸ்ட், எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து வைத்து கொள்ளுங்கள்.
இந்த மழையில டீயுடன் இதையும் சேர்த்து சாப்பிடுங்க
வேகவைக்கவும்:
அடுத்து ஒரு பாத்திரத்தில் நாம் பிசைந்து வைத்துள்ள மாவை வைத்து Double Boiling முறையில் வேகவைத்து எடுத்து கொள்ளுங்கள்.
பின் மாவு கேக் போல வெந்து வந்ததும் அதை அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிடுங்கள். ஆறியதும் உங்களுக்கு பிடித்த வடிவத்தில் அதை வெட்டி எடுத்து கொள்ளுங்கள்.
கடாயை அடுப்பில் வைக்கவும்:
பின் கடைசியாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் நன்றாக சூடானதும் நாம் வெட்டி வைத்துள்ளதை போட்டு நன்றாக பொன்னிறமாக பொறித்து எடுத்து கொள்ளுங்கள்.
அவ்வளவு தான் மாலைநேரத்தில் டீயுடன் சாப்பிடக்கூடிய மொறு மொறு ஸ்நாக்ஸ் ரெடி..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |