Dindigul Mushroom Biryani Recipe in Tamil
நாம் அனைவருக்குமே தினமும் ஒரே மாதிரியான உணவினை சாப்பிடுவது என்பது அவ்வளவாக பிடிக்காது. அதிலும் குறிப்பாக ஒரு சிலருக்கு பலவகையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதனால் தினமும் ஒரு புதிய வகையான உணவினை செய்து சுவைத்திடுவார்கள். அப்படிப்பட்ட உணவுப்பிரியர்களுக்கு மிகவும் பிடித்த பலவகையான உணவுமுறைகளில் ஒன்று தான் திண்டுக்கல் உணவு வகைகள் பொதுவாக திண்டுக்கல் அனைத்து உணவுகளுமே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் குறிப்பாக திண்டுக்கல் என்ற உடனே நாம் அனைவருக்கும் நினைவிருக்கும் வருவது தலப்பாக்கட்டி பிரியாணி தான். எனவே தான் இன்றைய பதிவில் திண்டுக்கல் மிகவும் பிரபலமான தலப்பாக்கட்டி காளான் பிரியாணி செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக பதிவிட்டுள்ளோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூடியுள்ள தலப்பாக்கட்டி காளான் பிரியாணி ரெசிபியை ஒருமுறை செய்து சுவைத்து பாருங்கள். அப்புறம் திரும்ப திரும்ப செய்து சுவைப்பிங்க. சரி வாங்க பதிவினுள் செல்லலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Dindigul Thalappakatti Mushroom Biryani Recipe in Tamil:
திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் காளான் பிரியாணி செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.
அதற்கு முன்பு இந்த பிரியாணி செய்வதற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.
- காளான் – 1 கிலோ
- ஜீரக சம்பா அரிசி – 1 கிலோ (1 கப்)
- பட்டை – 1
- ஏலக்காய் – 4
- கிராம்பு – 4
- அன்னாசிப்பூ – 1
- ஜாதிபத்திரி – 1
- கல்பாசி – 1
- பிரியாணி இலை – 1
- மராத்தி மொக்கு – 1
- ஜாதிக்காய் – ¼ டீஸ்பூன்
- சோம்பு – ½ டீஸ்பூன்
- சீரகம் – ½ டீஸ்பூன்
- மிளகு – ½ டீஸ்பூன்
- முந்திரி – 10
- சின்ன வெங்காயம் – 300 கிராம்
- இஞ்சி – 100 கிராம்
- பூண்டு – 100 கிராம்
- பச்சைமிளகாய் – 5
- எண்ணெய் – 200 மி.லி
- நெய் – 100 மி.லி
- மஞ்சள்தூள் – ½ டேபிள் ஸ்பூன்
- கொத்தமல்லி தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- மிளகாய் தூள் – ½ டேபிள் ஸ்பூன்
- தயிர் – 200 மி.லி
- உப்பு – தேவையான அளவு
- புதினா – 3 கைப்பிடி அளவு
- கொத்தமல்லி இலை – 3 கைப்பிடி அளவு
- தண்ணீர் – 1 ½ கப்
- எலுமிச்சை பழம் – 1
வீடே மணக்கும் கேரளா ஸ்டைல் எரிசேரியை இப்படி ஒரு முறை செய்து சுவைத்து பாருங்கள்
செய்முறை:
ஸ்டேப் – 1
முதலில் ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 பட்டை, 4 ஏலக்காய், 4 கிராம்பு, 1 அன்னாசிப்பூ, 1 ஜாதிபத்திரி, 1 கல்பாசி, 1 பிரியாணி இலை, 1 மராத்தி மொக்கு, ¼ டீஸ்பூன் ஜாதிக்காய், ½ டீஸ்பூன் சோம்பு, ½ டீஸ்பூன் சீரகம், ½ டீஸ்பூன் மிளகு மற்றும் 10 முந்திரி ஆகியவற்றை சேர்த்து நன்கு பொடியாக அரைத்து எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 2
அடுத்து அதே மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 300 கிராம் சின்ன வெங்காயம், 100 கிராம் இஞ்சி, 100 கிராம் பூண்டு மற்றும் 5 பச்சைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு பசைபோல அரைத்து எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 3
இப்பொழுது அடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தை வைத்து அதில் 200 மி.லி எண்ணெய் மற்றும் 50 மி.லி நெய்யை சேர்த்து லேசாக சூடுபடுத்தி கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் நாம் அரைத்து வைத்துள்ள பசையை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 4
அடுத்து அதனுடனே நாம் அரைத்து வைத்துள்ள பொடியில் இருந்து 2 டேபிள் ஸ்பூன், ½ டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூள், 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
மட்டன் பிடிக்குமா அப்போ ஒருமுறை இந்த செட்டிநாடு மட்டன் சுக்காவை செய்து சுவைத்து பாருங்க
ஸ்டேப் – 5
பிறகு அதனுடன் 200 மி.லி தயிரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பிறகு அதனுடன் நாம் நறுக்கி வைத்துள்ள 1 கிலோ காளான், 2 கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை, 2 கைப்பிடி அளவு புதினா மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 6
இவையெல்லாம் நன்கு வதங்கிய பிறகு 1 கிலோ (1 கப்) ஜீரக சம்பா அரிசியை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பிறகு எந்த பாத்திரத்தில் அரிசி எடுத்தீர்களோ அதே பாத்திரத்தை பயன்படுத்தி 1 1/2 பங்கு தண்ணீர் ஊற்றி லேசாக வேகவைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 7
அதன் பிறகு அதன் மீது 1 எலுமிச்சை பழசாறு, 50 மி.லி நெய், 1 கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை மற்றும் 1 கைப்பிடி அளவு புதினா ஆகியவற்றை சேர்த்து 20 நிமிடங்களுக்கு தம்போட்டு எடுத்தீர்கள் என்றால் சுவையான திண்டுக்கல் ஸ்டைல் காளான் பிரியாணி தயாராகிவிடும்.
அனைவருக்கும் பரிமாறி சுவைத்து மகிழுங்கள்.
இட்லி, சப்பாத்தி, தோசை ஆகியவற்று ஏற்ற கடாய் காளான் இப்படி ஒருமுறை செய்து சுவைத்து பாருங்க
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |