Dindigul Special Muttai Paya
முட்டை என்பது ஒரு சத்தான உணவாக இருந்தாலும் கூட அதனை யாரும் பெரிதாக அவித்து சாப்பிடுவதை விரும்புவது இல்லை. அதற்கு மாறாக பொரியல், ஆம்ப்லெட், வறுவல் என இது மாதிரி ரெசிபிகளை தான் சாப்பிடுகிறார்கள். ஆனால் முட்டையில் இவற்றை மட்டும் இல்லாமல் முட்டை குழம்பு, முட்டை கிரேவி, முட்டை பாயா என இதுபோன்ற உணவுகளையும் செய்து சாப்பிடலாம். அந்த வகையில் இன்றைய பதிவில் திண்டுக்கல் என்றால் அனைவருக்கும் ஞாயபகம் வரக்கூடிய முட்டை பாயா செய்வது எப்படி என்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
முட்டை பாயா:
- சீரகம்- 1 ஸ்பூன்
- சோம்பு- 1 ஸ்பூன்
- பெரிய வெங்காயம்- 3
- கடலை மாவு- 3 ஸ்பூன்
- தக்காளி- 1
- மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
- மிளகாய் தூள்- 1/2 ஸ்பூன்
- மல்லித்தூள்- 1/2 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- தேவையான அளவு
- முட்டை- 2
- பச்சை பட்டாணி- 1/4 கப்
முட்டை பாயா செய்வதற்கு மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களை எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
கேரளா ஸ்டைல் சிக்கன் குழம்பு செய்யலாம் வாங்க
முட்டை பாயா செய்வது எப்படி..?
முதலில் எடுத்து வைத்துள்ள 3 வெங்காயத்தையும் தனித்தனியாக நறுக்கி வைத்து கொள்ளுங்கள். அதேபோல் தக்காளியினையும் நறுக்கி வைத்து கொண்டு 2 முட்டையினை வேக வைத்து ஓட்டை உரித்து வைத்து விடுங்கள். அதேபோல் முதல் நாள் இரவே பச்சை பட்டாணியை தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள்.
இப்போது ஒரு பவுலில் 3 ஸ்பூன் கடலை மாவு சேர்த்து அதில் உப்பு சிறிதளவு மற்றும் 1 நறுக்கிய வெங்காயத்தினையும் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.
அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் பக்கோடாபோல் வேக வைத்து எடுத்து தனியாக வைத்து கொள்ளுங்கள்.
அடுத்த அடுப்பில் ஒரு கடாயினை வைத்து அதில் எண்ணெயினை சேர்த்து நன்றாக காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் எடுத்துவைத்துள்ள சீரகம், சோம்பு மற்றும் நறுக்கிய வெங்காயம், தக்காளியினை சேர்த்து நன்றாக வேக வதக்கி விடுங்கள்.
பின்பு கடாயில் உள்ள பொருளுடன் எடுத்துவைத்துள்ள மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், தேவையான அளவு மற்றும் தண்ணீர், ஊற வைத்துள்ள பச்சை பட்டாணியினை சேர்த்து நன்றாக கலந்து கொதிக்க விடுங்கள்.
கடைசியாக இவை அனைத்தும் நன்றாக கொதித்து பாயா பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை விட்டு இறக்கி விடுங்கள்.
இப்போது ஒரு பவுலில் 2 வேக வைத்த முட்டையினை சிறு சிறு துண்டாக நறுக்கி அதில் வைத்து அதன் கீழ் பாயாவை வைத்து மீண்டும் அதன் மேலே செய்து வைத்துள்ள பக்கோடாவை சேர்த்து கடைசியாக அதன் மேலே வெங்கயத்தை வைத்து சாப்பிட்டு பாருங்க முட்டை பாயாவின் சுவை சூப்பராக இருக்கும்.
அவ்வளவு தாங்க திண்டுக்கல் ஸ்பெஷல் முட்டை பாயா இப்படி தான் செய்யனும்.
கேரளா ஸ்டைல் கடலை கறி சாப்பிட்டா டேஸ்ட் நாக்குலேயே இருக்கும்
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |