திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி
அசைவ பிரியர்களுக்கு பிரியாணி என்றால் பிடிக்காமல் இருக்குமா.! மூன்று வேலையும் பிரியாணி கொடுத்தாலும் வேணாம் என்று சொல்லாமல் சாப்பிடுவார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி பிரியாணியை செய்வார்கள். அது போல ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு உணவு சமையல் ஸ்பெஷலாக இருக்கும். திருநெல்வேலி என்றால் அல்வா, திருப்பதி என்றால் லட்டு, திண்டுக்கல் என்றால் பிரியாணி. அதனால் இந்த பதிவில் திண்டுக்கல் தலைப்பக்கட்டி மட்டன் பிரியாணி செய்வது எப்படி இன்று தெரிந்து கொள்வோம் வாங்க..
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
திண்டுக்கல் மட்டன் தலப்பாக்கட்டி பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:
- சீரா சம்பா அரசி-1/4 கப்
- சின்ன வெங்காயம்-25
- பூண்டு- 10 பற்கள்
- இஞ்சி- 6 துண்டு
- நெய்- 3 தேக்கரண்டி
- பச்சை மிளகாய்- 6
- மட்டன்- 1/4 கிலோ
- எண்ணெய்-100 மில்லி லிட்டர்
- நெய்- 3 தேக்கரண்டி
- மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி
- மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி
- மல்லி தூள்- 1/2 தேக்கரண்டி
- சீரக தூள்- 1/2 தேக்கரண்டி
- பட்டை- சிறிதளவு
- கிராம்பு- 2
- ஏலக்காய்- 3
- பிரியாணி இலை- 1
கேரளா ஸ்டைல் சிக்கன் குழம்பு செய்யலாம் வாங்க
திண்டுக்கல் மட்டன் தலப்பாக்கட்டி பிரியாணி செய்முறை:

சின்ன வெங்காயம் 25, இஞ்சி பூண்டு 20, பச்சை மிளகாய் 6 போன்றவை தேவைப்படும்.

மசாலா செய்வதற்கு பட்டை, ஏலக்காய், கிராம்பு, முந்திரி, ஜாதிக்காய், கல்பாசி, பிரியாணி இலை போன்றவை சேர்த்து பொடியாக அரைத்து கொள்ளவும்.
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் மட்டன், சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து வேக விடவும்.

அடுத்து அடுப்பில் கடாய் வைத்து 3 தேக்கரண்டி நெய், 100 மில்லி லிட்டர் எண்ணெய் ஊற்றி அரைத்து வைத்த இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி கொள்ளவும். இதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலா பவுடரையும் சேர்த்து வதக்கி கொள்ளவும். பிறகு இதில் வேக வைத்த மட்டனை சேர்த்து வதக்கி விடவும். மட்டன் சிவந்த நிறம் வந்ததும் கொத்தமல்லி மற்றும் புதினா இலை, 1 தேக்கரண்டி மிளகாய் தூள், 1/2 தேக்கரண்டிமல்லி தூள், 1 தேக்கரண்டி சீரக தூள் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
இவை எண்ணெய் பிரிந்த நிலை வரும் போது 100 கிராம் அளவுக்கு தயிர் சேர்த்து வதக்கவும். பின் இதில் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்க்கவும். மட்டன் வேக வைத்த தண்ணீரை ஒரு கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் ஊற்றி கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும். தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு ஊற வைத்த சீரக சம்பா அரிசியை சேர்த்து 10 நிமிடம் வேக விடவும்.

10 நிமிடம் கழித்த பிறகு அடிப்பகுதியில் தோசை கல்லை வைத்து தம் 15 நிமிடத்திற்கு போட வேண்டும்.
கேரளா ஸ்டைல் கடலை கறி சாப்பிட்டா டேஸ்ட் நாக்குலேயே இருக்கும்..!
| இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |














