Dindigul Thalappakatti Nattu Kozhi Biriyani
ஒவ்வொரு ஊரிலும் ஒரு பொருள் சிறப்பானதாக இருக்கும். அதாவது இந்த பொருளுக்கு இந்த ஊர் பெயர் பெற்றது என்று நிறைய பேர் கூறி கேள்வி பட்டிருப்பீர்கள். அந்த வகையில் திண்டுக்கல் என்றாலே நம் அனைவரது நினைவிற்கு வருவது தலைப்பக்கட்டி பிரியாணி தான். திண்டுக்கல்லுக்கு பூட்டு என்ற காலம் மாறி திண்டுக்கல்லுக்கு பிரியாணி ஸ்பெஷல் என்றகாலம் வந்துவிட்டது. அசைவ பிரியர்கள் அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய உணவுகளில் முதலிடம் பிடிப்பது பிரியாணி தான். அதிலும், திண்டுக்கல் பிரியாணியை அனைவருமே விரும்பி சாப்பிடுவர். எனவே, திண்டுக்கல் தலப்பாக்கட்டி நாட்டுக்கோழி பிரியாணி செய்வது எப்படி என்பதை இப்பதிவில் பின்வருமாறு பிடித்து தெரிந்து கொள்ளலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How To Make Dindigul Thalappakatti Chicken Biryani in Tamil:
தேவையான பொருட்கள்:
- சீரா சம்பா அரசி- 2 கப்
- நாட்டுகோழி சுத்தம் செய்தது- 1 கிலோ
- இஞ்சி- 1 துண்டு
- பூண்டு- 10 பற்கள்
- சின்ன வெங்காயம்- 200 கிராம்
- புதினா இலை- 1 கைப்பிடி
- கொத்தமல்லி இலை- 1 கைப்பிடி
- பச்சை மிளகாய்- 3
- எண்ணெய்- 3 ஸ்பூன்
- நெய்- 4 ஸ்பூன்
- மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- தயிர்- 1/4 கப்
- எலுமிச்சை சாறு- 3 ஸ்பூன்
மசாலா செய்ய தேவையான பொருட்கள்:
- தனியா- 2 ஸ்பூன்
- சோம்பு- 1/2 ஸ்பூன்
- சீரகம்- 2 ஸ்பூன்
- மிளகு- 1 ஸ்பூன்
- பட்டை- 1 துண்டு
- கிராம்பு- 10
- ஏலக்காய்- 3
- ஜாதிபத்திரி- 1
- பிரியாணி இலை- 1
- அன்னாசி பூ- 1
- கல்பாசி- சிறிதளவு
- முந்திரி பருப்பு- 8
முட்டை பாயா திண்டுக்கல் ஸ்டைலில் வீட்டிலேயே செஞ்சு சாப்பிடலாம் வாங்க..!
திண்டுக்கல் பிரியாணி செய்யும் முறை:
ஸ்டேப்- 1
முதலில் சீரக சம்பா அரிசியை கழுவி 20 நிமிடம் ஊறவைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 2
பிறகு, அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் மசாலா செய்ய தேவையான பொருட்கள் அனைத்தையும் சேர்த்து லேசாக வறுத்து எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 3
இதனை சிறிது நேரம் ஆறவைத்து, ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 4
அடுத்ததாக, மிக்ஸி ஜாரில் நறுக்கிய இஞ்சி, பூண்டு, வெங்காயம், புதினா இலை, கொத்தமல்லி இலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 5
இப்போது, அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் மற்றும் 3 ஸ்பூன் நெய் சேர்த்து கொள்ளுங்கள். இவை சூடானதும், அதில் அரைத்து வைத்த இஞ்சு பூண்டு கலந்த கலவையை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 6
அடுத்து, அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் அரைத்து வைத்த பட்டை வகை பொடியை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 7
மசாலா நன்றாக வதங்கியதும், தயிர் சேர்த்து கிளறி விடுங்கள். இந்நிலையில் சுத்தம் செய்து வைத்துள்ள நாட்டுக்கோழியை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து விடுங்கள்.
திண்டுக்கல் தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணி செய்வது எப்படி.?
ஸ்டேப்- 8
பிறகு, 2 கப் அரிசிக்கு 4 கப் தண்ணீர் சேர்த்து, அதனுடன் 3 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கொதிக்கவிடுங்கள்.
ஸ்டேப்- 9
3 நிமிடம் கொதித்த பிறகு, அதில் ஊறவைத்த சீரக சம்பா அரிசியை சேர்த்து கொதிக்க விடுங்கள். இவை 10 நிமிடம் நன்றாக வெந்ததும், சூடான தோசை கல்லை அடிப்பகுதியில் வைத்து 15 நிமிடம் தம் போட்டு இறக்கினால் சுவையான திண்டுக்கல் நாட்டுக்கோழி பிரியாணி ரெடி.!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |