Easy Chutney Recipe in Tamil
இன்றைய காலகட்டத்தில் குடும்பத்தில் உள்ள அனைவருமே வேலைக்கு செல்ல வேண்டிய நிலைமை உருவாகிவிட்டது. அதனால் நமது அனைவரின் வீடும் காலை நேரத்தில் மிகவும் பரப்பரப்பாக காணப்படும். எனவே நாம் அனைவரின் வீடுகளிலும் காலை உணவு தினமும் ஒரு மாதிரியான உணவாக தான் இருக்கும். அதாவது காலை உணவாக தினமும் இட்லி தோசையாக தான் இருக்கும் ஒரு பெரியவர்கள் இதனை பழகி கொல்வார்கள். ஆனால் சிறிய குழந்தைகள் இட்லி தோசையை அவ்வளவாக தினமும் சாப்பிடுவதை விரும்பமாட்டார்கள். ஆனால் நமக்கும் அவர்கள் விரும்பும் உணவினை தயாரித்து அளிக்க நேரம் இருக்காது. அதனால் தினமும் நமது காலை உணவு இட்லி தோசையாக இருந்தாலும் கூட அதற்கு நாம் சைடிஷாக வைத்துக்கொள்ளும் சட்டினியை தினமும் ஒரு வகையாகவும் சுவையாகவும் செய்து சாப்பிடலாம். அதனால் தான் இன்றைய பதிவில் இட்லி தோசைக்கு ஏற்ற மிகவும் எளிமையான ஒரு சட்டினி ரெசிபியை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Simple Chutney Recipe in Tamil:
மிகவும் எளிமையான மற்றும் மிகவும் எளிமையான ஒரு சட்டினி ரெசிபியை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:
- வெங்காயம் – 1
- பூண்டு பற்கள் – 5
- காய்ந்த மிளகாய் – 5
- தக்காளி – 2
- தேங்காய் துருவல் – 3/4 கப்
- எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
- கடுகு – 1/2 டேபிள் ஸ்பூன்
- கருவேப்பிலை – 1 கொத்து
- பெருங்காயத்தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- தண்ணீர் – 1/2 கப்
நாவில் பட்ட உடனே கரையும் அன்னாசி அல்வா வெறும் 15 நிமிடத்தில் செய்துவிடலாம்
செய்முறை:
ஸ்டேப் – 1
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றி அதில் நாம் எடுத்து வைத்துள்ள 5 பூண்டு பற்கள், 4 காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 2
பின்னர் அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 1 வெங்காயத்தை நறுக்கி சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்க. அடுத்து அதனுடன் 2 தக்காளியை நறுக்கி சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 3
இறுதியாக நாம் எடுத்து வைத்துள்ள 3/4 கப் தேங்காய் துருவலை சேர்த்து லேசாக வதக்கி இறக்கி நன்கு சூடு ஆறவிடுங்கள்.
வாயில் வைத்ததும் வழுக்கி ஓடும் மிகவும் சுவையான பாதாம் அல்வா இப்படி செய்யுங்க
ஸ்டேப் – 4
பிறகு ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் வதக்கி வைத்துள்ள கலவை, தேவையான அளவு உப்பு மற்றும் 1/2 கப் தண்ணீரை சேர்த்து நன்கு அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 5
பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றி அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1/2 டேபிள் ஸ்பூன் கடுகு, 1 கொத்து கருவேப்பிலை, 1 காய்ந்த மிளகாய் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி நாம் அரைத்து வைத்துள்ள சட்டினியில் சேர்த்தால் நமது சுவையான சட்டினி தயார்.
ஹல்வாவை மிஞ்சும் சுவையில் செட்டிநாடு ஸ்பெஷல் உக்காரை ஸ்வீட் ரெசிபி செய்வது எப்படி
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |