1 கப் அவல் வைத்து செய்யும் இந்த ரெசிபி ஒன்று போதும் உங்க இரவு உணவை இனிமையாக்க..!

Advertisement

Easy Dinner Recipes in Tamil

பொதுவாக அனைவருக்குமே ஏதாவது ஒரு புது வகையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதிலும் குறிப்பாக நாம் அனைவருமே வேலைக்கு மற்றும் பள்ளிகளுக்கு சென்று ஓய்வெடுக்க வரும் நேரமான இரவு நேர உணவினை மிகவும் சுவையானதாகவும் ஆரோக்கியமானதாகவும் மாற்ற வேண்டும் என்ற ஆசை நாம் அனைவருக்குமே அதிகமாக இருக்கும். அதனால் தான் இன்றைய பதிவில் மிகவும் எளிமையான மற்றும் சுவையான இரவு உணவினை எவ்வாறு செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள முறையில் நீங்களும் உங்கள் வீட்டில் இந்த எளிமையான இரவு உணவினை செய்து சுவைத்து பாருங்கள்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Night Dinner Recipes in Tamil:

Night Dinner Recipes in Tamil

நாம் அனைவருக்குமே உயிர்வாழ்வதற்கு மிகவும் முக்கியமாக தேவைப்படுவது உணவு தான். அதிலும் குறிப்பாக இரவு உணவு என்பது மிக மிக முக்கியம். அதனால் தாம் மிகவும் எளிமையான மற்றும் சுவையான இரவு உணவு செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.

தேவைப்படும் பொருட்கள்:

  1. அவல் – 1 கப் 
  2. ரவை – 3/4 கப் 
  3. பேக்கிங் சோடா – 1/2 டீஸ்பூன் 
  4. வெங்காயம் – 1
  5. பச்சை மிளகாய் – 2
  6. இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன் 
  7. தக்காளி – 1
  8. உருளைக்கிழங்கு – 2 வேகவைத்தது 
  9. பச்சை பட்டாணி – 1/2 கப் 
  10. சீரகம் – 1/2 டீஸ்பூன் 
  11. மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் 
  12. மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன் 
  13. எண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன் 
  14. உப்பு – தேவையான அளவு 
  15. தண்ணீர் – தேவையான அளவு 

மதிய உணவு சமைக்க வீட்டில் காய்கறி இல்லையா அப்ப உடனே இப்படி செஞ்சு அசத்துங்க

செய்முறை:

ஸ்டேப் – 1

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கப் அவல்லை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு சுத்தம் செய்துவிட்டு அதில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்கு ஊறவைத்து எடுத்து கொள்ளுங்கள்.

பின்னர் ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் ஊறவைத்துள்ள 1 கப் அவல், 3/4 கப் ரவை, 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்கு அரைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 2

அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றி அதில் 1 வெங்காயம், 2 பச்சை மிளகாய் மற்றும் 1 தக்காளி ஆகியவற்றை நறுக்கி சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 3

பின்னர் அதனுடனே 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதினையும் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள். பிறகு இதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள்.

நாவில் பட்ட உடனே கரையும் அன்னாசி அல்வா வெறும் 15 நிமிடத்தில் செய்துவிடலாம்

ஸ்டேப் – 4

பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றி அதில் வேகவைத்தது 2 உருளைக்கிழங்கு மற்றும் 1/2 கப் பச்சை பட்டாணியை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 5

அடுத்து அதே கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றி அதில் 1/2 டீஸ்பூன் சீரகம் மற்றும் நாம் முன்னரே அரைத்து வைத்துள்ள விழுதினை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.

அதனுடனே வதக்கி வைத்துள்ள 2 உருளைக்கிழங்கு, 1/2 கப் பச்சை பட்டாணி, 1 டீஸ்பூன் மிளகாய் தூள், 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள்.

ஸ்டேப் – 6

Simple dinner recipes in tamil

அடுத்து நாம் அரைத்து வைத்துள்ள மாவினை பயன்படுத்தி தோசை ஊற்றி அதனை நன்கு வேகவைத்து எடுத்து அதனுடன் நாம் தயாரித்து வைத்துள்ள கிரேவியை சேர்த்து பரிமாறுங்கள்.

அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

வாயில் வைத்ததும் வழுக்கி ஓடும் மிகவும் சுவையான பாதாம் அல்வா இப்படி செய்யுங்க

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்!!!

 

Advertisement