5 Minute Snacks with Potato in Tamil
பொதுவாக, மூன்று வேலை உணவு சமைப்பதை விட ஈவினிங் ஸ்னாக்ஸ் செய்வது தான் பெரிய வேலையாக இருக்கிறது. தினமும் பள்ளி விட்டு வரும் குழைந்தைகளுக்கு என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கிறது என்று அனைவரும் யோசித்து கொண்டிருப்போம். அதிலும், குறிப்பாக 5 நிமிடம் அல்லது 10 நிமிடத்தில் என்ன ஸ்னாக்ஸ் செய்ய வேண்டும் என்று நினைப்போம். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் 5 நிமிடத்தில் சூப்பரான மொறு மொறு ஸ்னாக்ஸ் செய்வது எப்படி என்பதை பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Easy Evening Snacks with Potato in Tamil:
தேவையான பொருட்கள்:
- உருளைக்கிழங்கு – 2
- பெரிய வெங்காயம் – 1
- உப்பு – 1/2 ஸ்பூன்
- கடலை மாவு – 3 ஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
- சோள மாவு – 1 ஸ்பூன்
- மிளகாய் தூள் – காரத்திற்கேற்ப
- பெருங்காய தூள் – 1/4 ஸ்பூன்
- எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
ஸ்டேப் -1
முதலில், உருளைக்கிழங்கு நன்றாக கழுவி உருளைக்கிழங்கின் தோலை நீக்கி எடுத்து கொள்ளுங்கள். பிறகு, உருளைக்கிழங்கை துருவி எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -2
அடுத்து, வெங்காயத்தை கழுவி அதன் தோலை நீக்கிவிட்டு நீட்டவாக்கில் பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளுங்கள்.
இந்த மழையில டீயுடன் இதையும் சேர்த்து சாப்பிடுங்க
ஸ்டேப் -3
இப்போது, ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்து கொள்ளுங்கள். அதில், துருவி வைத்த உருளைக்கிழங்கு மற்றும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -4
இதனுடன், தேவையான அளவு உப்பு, கடலை மாவு, இஞ்சி பூண்டு, இஞ்சி பூண்டு விழுது, சோள மாவு, மிளகாய் தூள் மற்றும் பெருங்காய தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -5
அடுத்து, அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தி கொள்ளுங்கள்.
ஸ்டேப் -6
எண்ணெய் சூடானதும், தயார் செய்து வைத்துள்ள பக்கோடா கலவையை சிறிது சிறிதாக எண்ணெயில் போட்டு சிவற விட்டு எடுத்தால் சூப்பரான சுவையான ஈவ்னிங் ஸ்னாக்ஸ் தயார்..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |