Easy Lunch Recipes in Tamil
பொதுவாக வீட்டில் உள்ள பெண்களுக்கு வீட்டில் உள்ள அனைத்து வீட்டு வேலைகளை காட்டிலும் மிக மிக கடினமான வேலை என்றால் அது வீட்டில் உள்ளவர்களுக்கு சமையல் செய்வது தான். அதிலும் குறிப்பாக மதிய உணவு சமைப்பது என்பது மிக மிக கடினமான வேலை ஆகும். இதில் நாம் மதியம் சமைப்பதற்கு முக்கியமாக தேவைப்படும் மூலப்பொருளான காய்கறிகள் இல்லை என்றால் நமது பாடு திண்டாட்டம். அதனால் தான் இன்றைய பதிவில் வீட்டில் காய்கறிகள் இல்லாத நேரத்தில் மிகவும் குறைந்த நேரத்தில் மிகவும் சுவையான மதிய உணவு செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Simple Veg Lunch Recipes in Tamil:
நாம் அனைவருக்குமே உயிர்வாழ்வதற்கு மிகவும் முக்கியமாக தேவைப்படுவது உணவு தான். அதிலும் குறிப்பாக மதிய உணவு என்பது மிக மிக முக்கியம். அதனால் தாம் மிகவும் எளிமையான மற்றும் சுவையான மதிய உணவு செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
- சாதம் – 1 கப்
- கடுகு – 1/2 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
- கடலை பருப்பு – 1/2 டீஸ்பூன்
- சோம்பு – 1/2 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் – 1
- கருவேப்பிலை – 1 கொத்து
- வெங்காயம் – 3
- குடைமிளகாய் – 1/2
- மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
- கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
- மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
- இஞ்சிபூண்டு விழுது – 1 டீஸ்பூன்
- மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
- எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
நாவில் பட்ட உடனே கரையும் அன்னாசி அல்வா வெறும் 15 நிமிடத்தில் செய்துவிடலாம்
செய்முறை:
ஸ்டேப் – 1
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் 1/2 டீஸ்பூன் கடுகு, 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு, 1/2 டீஸ்பூன் கடலை பருப்பு, 1/2 டீஸ்பூன் சோம்பு மற்றும் 1 கொத்து கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 2
அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 1 பச்சை மிளகாய், 3 வெங்காயம் மற்றும் 1/2குடைமிளகாய் ஆகியவற்றை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
வாயில் வைத்ததும் வழுக்கி ஓடும் மிகவும் சுவையான பாதாம் அல்வா இப்படி செய்யுங்க
ஸ்டேப் – 3
அவை அனைத்து நன்கு வதங்கியவுடன் அதில் 1 டீஸ்பூன் மிளகாய் தூள், 1/2 டீஸ்பூன் கரம் மசாலா, 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள் மற்றும் 1 டீஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 4
அடுத்து அதில் 1 கப் சாதம் மற்றும் 1 டீஸ்பூன் மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இறுதியாக அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்த்தால் நமது சுவையான மற்றும் எளிமையான மதிய உணவு தயார்.
வாங்க சுவைக்கலாம்.. நீங்களும் இதனை செய்து சுவைத்து பாருங்கள்.
ஹல்வாவை மிஞ்சும் சுவையில் செட்டிநாடு ஸ்பெஷல் உக்காரை ஸ்வீட் ரெசிபி செய்வது எப்படி
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |