வருகின்ற திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி வருகின்றது. இந்நன்னாளில் விநாயகருக்கு பிடித்த உணவுகளை செய்து வணங்குவோம். அதில் கொழுக்கட்டை, சுண்டல், சர்க்கரை பொங்கல், லட்டு, எள்ளு உருண்டை போன்ற உணவுகளை செய்து சாப்பிடுவார்கள். அதில் லட்டு என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே லட்டை விரும்புவார்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் 10 நிமிடத்தில் ரவா லட்டு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
முதலில் அடுப்பில் கடாய் வைத்து அதில் நெய் ஊற்றி பாதாம், முந்திரி, திராட்சை சேர்த்து வதக்கி கொள்ளவும். திராட்சை பொரித்த பிறகு அதனுடன் ஒரு கப் ரவா சேர்த்து வதக்கி கொள்ளவும்.
ரவா வதங்கி வாசம் வந்த பிறகு, 1/2 கப் தேங்காய் சேர்த்து வதக்க வேண்டும். இதில் சேர்க்க கூடிய தேங்காவை மிக்சி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் அரைத்து வதங்கி கொண்டிருக்கின்ற ரவாவில் சேர்த்து கொள்ளவும்.
அடுத்து ஒரு கப் ரவாவிற்கு 3/4 கப் ஜீனி சேர்த்து வதக்கி கொள்ளவும். வதக்கிய பொருளானது உதிரி உதிரியாக வரும் பதத்தில் அடுப்பை அணைத்து விடவும்.
அடுத்து வதக்கி வைத்த ரவாவனது கையில் தொடுகின்ற சூடு குறைந்ததும் காய்ச்சிய பசும்பால் 3 தேக்கரண்டி சேர்த்து வதக்கி உருண்டைகளாக பிடிக்க வேண்டும்.