Egg Stuffed Chapathi in Tamil
கோதுமையில் செய்யும் உணவான சப்பாத்தியை பெரும்பாலானவர்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் உணவுகளை ஒரே மாதிரியாக சாப்பிட்டால் அழுத்து போகிவிடும். அதனால் இந்த பதிவில் வித்தியாசமான முறையில் சப்பாத்தியில் ஒரு டிஸ்ஸை தெரிந்து கொள்வோம் வாங்க..
முட்டை சப்பாத்திசெய்ய தேவையான பொருட்கள்:
- கோதுமை மாவு –1/4 கப்
- எண்ணெய் –3 தேக்கரண்டி
- மல்லி தூள்- 1 தேக்கரண்டி
- மிளகாய் தூள் -காரத்திற்கேற்ப
- தக்காளி-1
- வெங்காயம்-2
- சீரகம்- 1 தேக்கரண்டி
கத்திரிக்காய் கிரேவி இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்
முட்டை சப்பாத்தி செய்முறை:
நீங்கள் எப்பொழுதும் போல சப்பாத்தி மாவு எப்படி பிணைந்து வைப்பீர்களோ அதை போல் பிணைந்து வைத்து கொள்ளவும்.
அடுத்து முட்டை ஸ்டாப் செய்வதற்கு அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கொள்ளவும். எண்ணெய் சூடானதும் 1/2 தேக்கரண்டி சீரகம், வெங்காயம் 2, பச்சை மிளகாய் 2 சேர்த்து வதக்கி கொள்ளவும். பிறகு இதனுடன் 1 தேக்கரண்டி , மிளகாய் தூள் கரத்திற்கேற்ப, நறுக்கிய தக்காளி 1 சேர்த்து வதக்கி கொள்ள்வும்.
வெங்காயம் சுருங்கிய பதம் வரும் வரைக்கும் வதக்க வேண்டும்.
பிணைந்து வைத்துள்ள சப்பாத்தி மாவை சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்க்க வேண்டும். பின் அதன் உள்பகுதியில் செய்து வைத்துள்ள மசாலா சேர்த்து பரப்பி விடவும். அதனுடனே வேக வைத்த முட்டையை துருவி சேர்த்து கொள்ளவும். அதன் மேல் பகுதியில் இன்னொரு சப்பாத்தி தேய்த்து அதன் மேல் வைத்து விடவும்.
இதனை தோசை கல்லில் சேர்த்து எண்ணெய் ஊற்றி சிவந்த நிறம் வரும் வரைக்கும் போட்டு எடுக்கவும். அவ்ளோ தாங்க முட்டை ஸ்டப் சப்பாத்தி ரெடி.!
சப்பாத்திக்கு இப்படி ஒருமுறை Mushroom Gravy செய்து சுவைத்து பாருங்கள்
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |