Ellu Kozhukattai Recipe in Tamil
பொதுவாக நமது இல்லங்களில் அல்லது ஏதாவது மிகவும் முக்கியமான விசேஷ நாட்களில் அந்த நாட்களுக்கு உரிய அனைத்தையும் நாம் செய்து கொண்டாடுவது தான் நமது முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து வழக்கமாக உள்ளது. அதேபோல் தான் கிருஷ்ணர் பிறந்த தினமான விநாயகர் சதுர்த்தி அன்றைக்கும் அன்றைய தினத்துக்கு உரிய உணவுகள், பலகாரங்கள் மற்றும் அலங்காரங்களை செய்து கொண்டாடப்படும். அன்றைய தினத்தில் விநாயகரை மிகவும் அழகாக அலங்காரம் செய்து அவருக்கு மிகவும் பிடித்த உணவுவகைகளை செய்து அவருக்கு படைத்துவிட்டு நாமும் சாப்பிட்டால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால் தான் இன்றைய பதிவில் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் எள்ளு கொழுக்கட்டையை செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்வோம் வாங்க..
Vinayagar Chaturthi Recipes in Tamil:
விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு மிகவும் பிடித்த கொழுக்கட்டையை செய்து அவருக்கு படைத்துவிட்டு அனைவரும் உண்பது வழக்கம். அப்படி அவருக்கு படைக்கும் கொழுக்கட்டை வகையில் ஒன்று தான் இந்த எள்ளு கொழுக்கட்டையும் இதனை செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக காணலாம் வாங்க.
முதலில் இந்த ரெசிபிக்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- கொழுக்கட்டை மாவு – ½ கப்
- எள் – ½ கப்
- துருவிய வெல்லம் – ¾ கப்
- துருவிய தேங்காய் – ¼ கப்
- ஏலக்காய்தூள் – 1 டீஸ்பூன்
- எண்ணெய் – 1 தேக்கரண்டி
- தண்ணீர் – தேவையான அளவு
தேங்காய் லட்டுவை இப்படி ஒரு முறை செய்து பாருங்க டேஸ்ட் நாவைவிட்டு நீங்காது
செய்முறை:
ஸ்டேப் – 1
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள ½ கப் எள்ளினை நன்கு தண்ணீரை பயன்படுத்தி சுத்தம் செய்து கொள்ளுங்கள். பிறகு அதனை நன்கு உலர வைத்து ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நாகு பொடியாக அரைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 2
அடுத்து நாம் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் ½ கப் கொழுக்கட்டை மாவினை சேர்த்து அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 தேக்கரண்டி எண்ணெய் மற்றும் தேவையான அளவு தண்ணீரை சூடுபடுத்தி சேர்த்து நன்கு கொழுக்கட்டை மாவு பதத்திற்கு பிசைந்து வைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 3
அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் முன்னரே அரைத்து வைத்துள்ள எள்ளினை சேர்த்து நன்கு வறுத்து கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள ¾ கப் துருவிய வெல்லம்,¼ கப் துருவிய தேங்காய் மற்றும் 1 டீஸ்பூன் ஏலக்காய்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
வெல்லம் நன்கு உருகியவுடன் அதனை ஒரு தட்டில் சேர்த்து நன்கு உலரவிடுங்கள்.
ஸ்டேப் – 4
பிறகு நாம் தயாரித்து வைத்துள்ள சூரணத்தை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளுங்கள். பின்னர் நாம் தயாரித்து வைத்துள்ள கொழுக்கட்டை மாவினை கொழுக்கட்டை அச்சில் சேர்த்து அதனுடன் நாம் தயாரித்து வைத்துள்ள எள்ளு சூரணத்தையும் சேர்த்து கொழுக்கட்டையை தயாரித்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 5
பிறகு இதனை 8 முதல் 10 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து எடுத்தால் நமது மிகவும் சுவையான எள்ளு கொழுக்கட்டை தயாராகிவிட்டது.
வாங்க சுவைக்கலாம்.. நிங்களும் இதனை உங்கள் வீட்டில் செய்து சுவைத்து பாருங்கள்.
இப்படி செஞ்சி கொடுங்க சுரைக்காய் பிடிக்காதவங்களும் கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |