Evening Snacks Recipe at Home in Tamil
வணக்கம் நண்பர்களே.. நாம் அனைவருக்குமே மொறு மொறுன்னு ஸ்னாக்ஸ் சாப்பிட தான் பிடிக்கும். அதிலும் குழந்தைகள் மொறுமொறுப்பாக உள்ள ஸ்னாக்ஸை தான் அதிகம் சாப்பிட விரும்புவார்கள். இதனால் நம் கடைகளில் விற்கும் ஸ்னாக்ஸ் வகைகளை வாங்கி தருவோம். ஆனால் அதனை விட நம் வீடுகளில் செய்யும் ஸ்னாக்ஸ் தான் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது. எனவே, குழந்தைகள் ஸ்கூல் விட்டு வந்ததும் வீட்டிலே அவர்களுக்கு பிடித்தவாறு ஹெல்தியான ஸ்னாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள உருளைக்கிழங்கு வடை செய்முறையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Tea Snacks Recipe in Tamil:
தேவையான பொருட்கள்:
- உருளைக்கிழங்கு – 2
- எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
- வெங்காயம் – 1
- கொத்தமல்லி – 1 கைப்பிடி
- கருவேப்பிலை – 1 கைப்பிடி
- பூண்டு – 5 பற்கள்
- இஞ்சி – 1 சிறிய துண்டு
- மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
- பிரியாணி தூள் – 1/2 ஸ்பூன்
- கடலை மாவு – 1 ஸ்பூன்
- அரசி மாவு – 1 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- தண்ணீர் – சிறிதளவு
செய்முறை:
ஸ்டேப் -1
முதலில் உருளை கிழங்கின் தோலை நீக்கிவிட்டு அதனை சீவி எடுத்து கொள்ளுங்கள்.
மாலை நேரத்தில் சாப்பிடுவதற்க்கு இந்த மாதிரி பஜ்ஜி சாப்பிடுங்க..
ஸ்டேப் -2
அதன் பிறகு, ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து கொள்ளுங்கள். அதில் சீவி வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -3
அடுத்து, இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கருவேப்பிலை மற்றும் இஞ்சி பூண்டுகளை சேர்த்து நன்கு கிளறி விடுங்கள்.
ஸ்டேப் -4
பின்பு, இதில் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் பிரியாணி தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -5
இறுதியாக, இதனுடன் கடலை மாவு மற்றும் அரிசி மாவு சேர்த்து நன்கு பிசைந்து வடை வடிவில் தட்டி எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -6
இப்போது, அடுப்பில் ஒரு வாணலை வைத்து அதில், எண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும் அதில் தயார் செய்து வைத்துள்ள வடையை போட்டு சிவற விட்டு பொரித்து எடுத்தால் சூப்பரான மொறுமொறு உருளைக்கிழங்கு வடை தயார்..!
மொறு மொறு பிரட் போண்டா..! மாலைநேர தேநீருடன் சுவைக்க அருமையான ஸ்நாக்ஸ்..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |