வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உங்க வீட்டுல பிரெட் இருக்க அப்போ இந்த ஸ்னாக்ஸ் ரெசிபியை செய்து சுவைத்து பாருங்க..!

Updated On: November 23, 2023 11:11 AM
Follow Us:
Evening Snacks Recipe in Tamil
---Advertisement---
Advertisement

Evening Snacks Recipe in Tamil

பொதுவாக மழைக்காலம் வந்துவிட்டாலே மாலைநேரங்களில் ஏதாவது சுட சுட ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் அதிக அளவு தோன்றும். அதனால் அதிலும் குறிப்பாக குழந்தைகள் உள்ள  வீடுகளில் தினமும் ஏதாவது ஒரு புதுமையான மாலை நேர ஸ்னாக்ஸ் வேண்டும் என்று அவர்கள் கேட்டு கொண்டே இருப்பார்கள். அதனால் நாமும் நமது குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு புதுவிதமான மாலைநேர ஸந்க்ஸ் செய்து தர வேண்டும் என்று நினைப்போம் ஆனால் என்ன செய்து தந்தால் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றும் சிந்தனை செய்வோம். அதனால் தான் இன்றைய பதிவில் மிகவும் எளிமையான மற்றும் மிகவும் சுவையான Evening ஸ்னாக்ஸ் ரெசிபியை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் தான் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள ஸ்னாக்ஸ் ரெசிபியை செய்து சுவைத்து பாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Simple Evening Snacks Recipe in Tamil:

Simple Evening Snacks Recipe in Tamil

நமது மலை நேரத்தை மிகவும் இனிமையாக கழிக்க உதவும் ஒரு ஸ்னாக்ஸ் ரெசிபியை பற்றி விரிவாக காணலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  1. பிரெட் – 10
  2. சோள மாவு – 2 டீஸ்பூன்
  3. சீரகம் – 1/4 டீஸ்பூன்
  4. பெரிய வெங்காயம் – 1
  5. நறுக்கிய பூண்டு – 1/2 டீஸ்பூன்
  6. நறுக்கிய கேப்சிகம் – 1 டீஸ்பூன்
  7. பச்சை மிளகாய் – 2
  8. தக்காளி – 1/2
  9. சில்லி ஃப்ளேக்ஸ் – 1/4 டீஸ்பூன்
  10. மிளகு தூள் – 1/4 டீஸ்பூன்
  11. கொத்தமல்லி தூள் – 1/2 டீஸ்பூன்
  12. மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  13. வேகவைத்த உருளைக்கிழங்கு – 2
  14. கொத்தமல்லி இலை – தேவையான அளவு
  15. எண்ணெய் – 1/2 டீஸ்பூன்
  16. உப்பு – தேவையான அளவு
  17. தண்ணீர் – தேவையான அளவு

1 கப் அவல் வைத்து செய்யும் இந்த ரெசிபி ஒன்று போதும் உங்க இரவு உணவை இனிமையாக்க

செய்முறை:

ஸ்டேப் – 1

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 1/2 டீஸ்பூன் எண்ணெய்யை ஊற்றி அதில் 1/4 டீஸ்பூன் சீரகம், 1/2 டீஸ்பூன் நறுக்கிய பூண்டு மற்றும் 1 டீஸ்பூன் நறுக்கிய கேப்சிகம் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 2

பின்னர் அதனுடனே 1 பெரிய வெங்காயம், 2 பச்சை மிளகாய் மற்றும் 1/2 தக்காளி ஆகியவற்றை நன்கு பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். பிறகு அதில் 1/4 டீஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ், 1/4 டீஸ்பூன் மிளகு தூள், 1/2 டீஸ்பூன் கொத்தமல்லி தூள் மற்றும் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 3

அடுத்து அதில் நாம் 2 வேகவைத்த உருளைக்கிழங்கிணை நன்கு மசித்து சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இறுதியாக அதில் தேவையான அளவு உப்பு மற்றும் கொத்தமல்லி இலையை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

மதிய உணவு சமைக்க வீட்டில் காய்கறி இல்லையா அப்ப உடனே இப்படி செஞ்சு அசத்துங்க

ஸ்டேப் – 4

இப்பொழுது நாம் எடுத்து வைத்துள்ள 10 பிரெட்டுகளின் ஓரங்களை நறுக்கிவிட்டு அதனை சப்பாத்தி தேய்க்கும் கட்டையை பயன்படுத்தி தேய்த்து வட்ட வடிவில் நறுக்கி கொள்ளுங்கள். பின்னர் நாம் நறுக்கிய தேவையில்லாத பிரெட் துண்டுகளை எல்லாம் ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 5

அடுத்து 2 டீஸ்பூன் சோள மாவுடன் தேவையான அளவு தண்ணீரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் நாம் நறுக்கி வைத்துள்ள பிரெட்டுகளில் இருந்து ஒரு துண்டை எடுத்து அதில் நாம் தயாரித்து வைத்துள்ள மசாலா கலவையை வைத்து அதனை சுற்றி சோள மாவு கலவையை தடவி அதன் மீது மற்றொரு பிரெட்டு துண்டினை வைத்து கொள்ளுங்கள்.

இதேபோல் மீதமுள்ள பிரெட்டு துண்டுகளையும் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 6

Bread Recipes in tamil

பின்னர் அதனை சோள மாவு தண்ணீரில் லேசாக நினைத்து நாம் அரைத்து வைத்துள்ள பிரெட் தூளில் போட்டு புரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பொறித்து எடுத்தால் சுவையான மாலைநேர ஸ்னாக்ஸ் தயாராகிவிடும்.

நாவில் பட்ட உடனே கரையும் அன்னாசி அல்வா வெறும் 15 நிமிடத்தில் செய்துவிடலாம்

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்!!!

 

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

கேரளாவின் ஓணம் ஸ்பெஷல் காரம் மற்றும் புளிப்பு சுவைக்கொண்ட இஞ்சிப்புளி

aadi 18 special food in tamil

ஆடிப்பெருக்கு ஸ்பெஷல் காப்பரிசியை இப்படி செஞ்சு பாருங்க..

sorakkai podimas seivathu eppadi in tamil

குஜராத்தி ஸ்பெஷல் துதி தோக்லி (சுரைக்காய் பொடிமாஸ்) Recipe ….

mutton kabab recipe in tamil

பக்ரீத் ஸ்பெஷல் மட்டன் கபாப் செய்து பாருங்க..

bakrid special mutton biryani in tamil

பக்ரீத் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி செய்வது எப்படி..?

carot payasam

பக்ரீத் ஸ்பெஷல் கேரட் பாயாசத்தை ஒரே ஒருமுறை செய்து சுவைத்து பாருங்க மீண்டும் மீண்டும் செய்து சுவைப்பீங்க..!

கோடைகாலத்தில் அடிக்கிற வெயிலுக்கு ஏற்ற மாதிரி குளு குளுன்னு பன்னீர் ரோஸ் ஜெல்லி செய்து சுவைத்து பாருங்கள்..!

Nungu Sarbath Recipe in Tamil

கோடை காலத்தில் எத்தனையோ சர்பத் குடிச்சிருப்பீங்க..ஆனா இந்த மாதிரி ஒரு சர்பத்தை குடிச்சிருக்கவே மாட்டீங்க..!

Omapodi Recipe in Tamil

மொறு மொறுன்னு 10 நிமிடத்தில் சுவையான ஓமப்பொடி செய்வது எப்படி..?