Bread Omelette Recipe in Tamil
பெரும்பாலான வீட்டில் காலை மற்றும் மாலை நேரத்தில் உணவாக டிபன் தான் செய்கிறார்கள். அதிலும் இட்டலி, தோசை, கிச்சடி, பொங்கல், சப்பாத்தி, பூரி இந்த மாதிரி உணவுகளை தான் செய்கிறார்கள். இது போல தொடர்ந்து செய்து சாப்பிட்டு கொண்டே இருந்தால் ஒரு நேரத்தில் போர் அடித்து விடும். புதிது புதிதாக செய்து சாப்பிட வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அதிலும் சிலருக்கு வேலைக்கு செல்கின்ற அவசரத்தில் சீக்கிரமாக செய்கின்ற பிரேக் பாஸ்ட் உணவு இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பார்கள். அதனால் தான் இந்த பதிவில் சீக்கிரமாகவும், புதிதாகவும் உள்ள பிரேக் பாஸ்ட் உணவை பற்றி அறிந்து கொள்வோம்.
பிரட் ஆம்லெட் செய்ய தேவையான உணவு பொருட்கள் மற்றும் செய்முறை:
பிரட் ஆம்லெட் செய்ய தேவையான பொருட்கள் |
பிரட் ஆம்லெட் செய்முறை |
பிரட்- 6 |
முதலில் அடுப்பில் கடாய் வைத்து அதில் 2 எண்ணெய் ஊற்ற வேண்டும், எண்ணெய் சூடானதும் அதில் 2 பற்கள் பூண்டை சேர்த்து கொள்ளவேண்டும். |
கேரட், பீன்ஸ், கொடை மிளகாய்- சிறிதளவு |
அதனுடன் நறுக்கிய வெங்காயம், கேரட், கொடை மிளகாய், பீன்ஸ் போன்றவை சேர்த்து வதக்க வேண்டும். |
பூண்டு-5 பற்கள் |
காய்கறி சுருங்கிய பதம் வந்ததும் அதில் மஞ்சள் தூள் சிறிதளவு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். |
வெங்காயம்- 3 |
மசாலாவின் பச்சை வாசனை போன பிறகு தக்காளி சாஸ் சேர்த்து கலந்து வதக்கி கொள்ளவும். இதனை தனியாக ஒரு பவுலில் எடுத்து கொள்ளவும். |
முட்டை-2 |
பின் ஒரு பவுலில் 2 முட்டையை உடைத்து ஊற்றி கொள்ளவும். அதனுடன் மிளகு தூள் 1 தேக்கரண்டி, கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து கலந்து கொள்ளவும். |
மிளகு தூள்- 1 தேக்கரண்டி |
பிறகு தோசை கல் வைத்து அதில் வெண்ணெய் அல்லது நெய் ஊற்றி கொள்ளவும். கல் சூடானதும் 2 பிரட் எடுத்து கொள்ளவும். |
மிளகாய் தூள்- 1/2 |
அதில் ஒரு பிரட்டில் செய்து வைத்துள்ள மசாலாவை ஒரு பக்கம் சேர்த்து கொள்ளவும், அதன் மேலே பிரட்டை போட்டு மூட வேண்டும். |
மஞ்ச தூள்- 1/4 |
இதனை முட்டையில் டிப் செய்து கல்லில் போட வேண்டும். இரண்டு புறமும் சிவந்த நிறம் வந்ததும் ஒரு பாத்திரத்தில் வைத்து பரிமாறலாம். |
வெண்ணெய் அல்லது நெய்- 2 தேக்கரண்டி |
ஒரு முறை உங்க வீட்டில் இந்த உணவை செஞ்சு பாருங்க அப்புறம் அடிக்கடி செய்து தர சொல்லுவாங்க. |
கொத்தமல்லி- சிறிதளவு |
மாலை நேரத்தில் சாப்பிடுவதற்க்கு இந்த மாதிரி பஜ்ஜி சாப்பிடுங்க..