மீன் குழம்பு வைத்து சாப்பிட்டுருப்பீர்கள்..ஆனால் மீன் குருமா சாப்பிட்ருக்கீர்களா..

fish kurma in tamil

Meen Kurma

அசைவம் உணவு என்றால் யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். அதிலும் மீன் என்றால் சொல்லவா வேண்டும்,. மீன் என்று சொன்னாலே நாவில் எச்சில் ஊரும். மீன் குழம்பு, மீன் வறுவல், மீன் பொரியல் என்று சாப்பிட்ருப்போம். அப்பப்பா என்னா ருசி என்று இரசித்து, சுவைத்து சாப்பிட்ருப்போம். பல பேருக்கும் தெரியாத மீனில் செய்ய கூடிய ஒரு ரெசிபியை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். அது என்னென்ன ரெசிபி என்று யோசித்து கொண்டே முழு பதிவையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

மீன் குர்மா செய்ய தேவையான பொருட்கள்:

 1. மீன் – 1/4 கிலோ
 2. வெங்காயம்-2 கைப்பிடி
 3. மல்லி தூள் – 3 தேக்கரண்டி
 4. மிளகாய் தூள்- தேக்கரண்டி
 5. எண்ணெய் -1 தேக்கரண்டி
 6. உப்பு – தேவையான அளவு
 7. மஞ்சள் தூள் –1 /2 தேக்கரண்டி
 8. இஞ்சி பூண்டு விழுது –2 தேக்கரண்டி
 9. தக்காளி – 2 கைப்பிடி
 10. தேங்காய்- 1/2 மூடி
 11. கொத்தமல்லி- 2 கைப்பிடி

வீடே மணக்கும் அளவிற்கு கிராமத்து நெத்திலி மீன் குழம்பு செய்வது எப்படி..?

மீன் குர்மா செய்முறை:

fish kurma in tamil

அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி, பெருஞ்சீரகம், கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். இஞ்சி பூண்டு பேஸ்ட், நறுக்கி வைத்த தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். இரண்டு பச்சை மிளகாயை நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும்.

பின் இதில் மிளகாய் தூள், மஞ்சள் தோளில், மல்லி தூள் சேர்த்து வதக்க வேண்டும். லேசாக தண்ணீர் சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் அரைத்து வைத்த தேங்காய் தேவையான அளவு தண்ணீர், தேவையான அளவு உப்பு, 1/4 கிலோ மீன் சேர்த்து கலந்து விட வேண்டும்.

அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாத மீன் வகைகள் என்ன தெரியுமா?

புளி தண்ணீர் சிறிதளவு ஊற்றி கொதிக்க விட வேண்டும். இதில் பச்சை வாசனை போகி, எண்ணெய் பிரிந்து வரும் நிலையில் கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்து விட வேண்டும். அவ்ளோ தாங்க சுவையான மீன் குர்மா தயார்..உங்கள் வீட்டிலும் ஒரு முறை செய்து பாருங்க..

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil