French Fries Recipe in Tamil
சாதாரணமாக வீட்டில் மாலை நேரத்தில் டீயுடன் ஏதாவது ஸ்னாக்ஸ் செய்து சாப்பிட்டால் நல்லா இருக்குமே என்று நினைப்பார்கள். அதுவும் இந்த மழைக்காலம் வந்துவிட்டால் ஏதவாது சூட சாப்பிடணும் போல இருக்கும். அப்படி நாம் செய்யும் ஸ்னாக்ஸ் ஆக இருப்பது பஜ்ஜி, பக்கோடா, வடை போன்றவை தான் செய்து சாப்பிடுவோம். ஏதவாது வித்தியாசமாக செய்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பார்கள். அவர்களுக்கு ஆக தான் இந்த பதிவில் உருளைக்கிழங்கு வைத்து ஒரு அருமையான ரெசிபியை பற்றி அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
பிரெஞ்ச் பிரை செய்ய தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை:
தேவையான பொருட்கள் | செய்முறை |
உருளைக்கிழங்கு-4 | முதலில் 4 உருளைக்கிழங்கை எடுத்து கொள்ளவும். இந்த உருளைக்கிழங்கு ஆனது பெரியதாக இருக்க வேண்டும். இதனின் தோல்களை சீவி நீட்ட வாக்கில் கட் செய்து எடுத்து கொள்ள வேண்டும். |
எண்ணெய்- 1/2 லிட்டர் | நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை குளிர்ந்த நீரில் 20 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும். அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை எடுத்து கொள்ளவும். இதில் உப்பு தேவையான அளவு சேர்த்து கொள்ள வேண்டும். |
உப்பு- தேவையான அளவு | இதில் ஊறுகின்ற உருளைக்கிழங்கை சேர்த்து கொள்ள வேண்டும். அதன் பிறகு 15 நிமிடம் கழித்து தண்ணீரிலிருந்து வெளியே எடுத்து ஈரம் இல்லாமல் உணர விட வேண்டும். |
தண்ணீர்- ஒரு கப் | ஒரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும். எண்ணெய் மிதமான சூடு வந்த பிறகு உணர விட்ட உருளைக்கிழங்கை சேர்த்து பொரிக்க வேண்டும். |
கடாய்- 1 | லேசாக பொரிந்ததும் வெளியே எடுத்து 30 நிமிடம் அப்படியே விட வேண்டும். 30 நிமிட கழித்து மறுமுறை எண்ணெயில் போட்டு சிவந்த நிறம் வரும் வரை வேக விட வேண்டும். |
தக்காளி சாஸ் – சிறிதளவு | சிவந்த நிறம் வந்த பிறகு வெளியே எடுத்து அதனுடன் தக்காளி சாஸ் தொட்டு சாப்பிட்டால் அப்படி இருக்கும்,. ஒரு முறை செஞ்சு பாருங்க.. |
கோதுமை மாவு இருந்தால் போதும் வித்தியாசமான பூரி ரெபிசி இப்படி செய்யலாம்..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |