விநாயகர் சதுர்த்திக்கு இந்த போளியை செய்து பாருங்கள்.. சூப்பரா இருக்கும்..

Advertisement

How To Make Puran Poli at Home in Tamil

ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு விதமான உணவுகளை செய்து வருவோம். அதாவது ஒவ்வொரு கடவுளை வழிபடும் போது அக்கடவுளுக்கு பிடித்த உணவுகளை செய்து படைப்போம். அந்த வகையில் வருகின்ற செப்டெம்பர் 18 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வருகிறது. இந்த நன்னாளில் விநாயகருக்கு பிடித்த உணவான கொழுக்கட்டை, சுண்டல், பூரண போளி போன்றவற்றை படைப்பார்கள். இருந்தாலும் பெரும்பாலான வீடுகளில் கொழுக்கட்டை மற்றும் சுண்டல் மட்டுமே செய்வார்கள். ஒரு சில வீடுகளில் தான் பூரண போளி செய்து படைப்பார்கள். எனவே நீங்களும் கொழுக்கட்டையை தவிர்த்து வேறு எதாவது புதிதாக செய்ய விரும்பினால் இந்த போளியை செய்து பாருங்கள்.

பூரண போளி செய்வது எப்படி.?

பூரண போளி செய்வது எப்படி

தேவையான பொருட்கள்:

  • மைதா – 2 கப் 
  • மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன் 
  • உப்பு – 2 சிட்டிகை 
  • கடலை பருப்பு – 1 கப் 
  • வெல்லம் – 1/2 கப் 
  • ஏலக்காய் – 4
  • நெய் – தேவையான அளவு 
  • எண்ணெய் – 2 ஸ்பூன்

Ganesh Chaturthi Special Recipe in Tamil:

ஸ்டேப் -1

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் 2 கப் மைதாவை சேர்த்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -2

இதனுடன் 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து அதில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து ஊறவைத்து விடுங்கள்.

ஸ்டேப் -3

தண்ணீர் சேர்க்கும் போது கவனமாக சேர்க்க வேண்டும். ஏனென்றால் அதிக தண்ணீர் சேர்த்துவிட்டால் போலி நன்றாக வராது.

விநாயகர் சதுர்த்திக்கு இந்த லட்டு செஞ்சு பாருங்க.. அப்படி ஒரு சுவை..

ஸ்டேப் -4

அடுத்து, அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 1 கப் கடலை பருப்பை சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக வேகவைத்து மசித்து எடுத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -5

அதன் பிறகு, ஒரு பாத்திரத்தில் 1/2 கப் வெல்லத்தை சேர்த்து 1/4 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -6

இப்போது கரைத்து வைத்த வெல்ல கரைசலை நன்றாக கொதிக்க வைத்து, அதில் மசித்து வைத்த கடலை பருப்பை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -7

இந்நிலையில் 1 சிட்டிகை உப்பும் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இத்துடன் தட்டிய 4 ஏலக்காயை சேர்த்து நன்கு சுருள வதக்கி எடுத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -8

அடுத்து, பிசைந்து வைத்த மைதா மாவினை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து அதன் உள்ளே தயார் செய்து வைத்துள்ள பூரணத்தை வைத்து உருண்டையாக பிடித்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -9

இந்த உருண்டையை சப்பாத்தி போல தேய்த்து கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து அதில் தேவையான அளவு நெய் சேர்த்து போலியை போட்டு இரண்டு பக்கமும் வேகவைத்து எடுத்தால் சூப்பரான விநாயகருக்கு பிடித்த பூரண போளி தயார்..

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் கொழுக்கட்டை

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil

 

Advertisement