கோதுமை மாவில் சுவையான மற்றும் இனிப்பான ஈவ்னிங் ஸ்னாக்ஸ் செய்யலாம் வாங்க..!

Advertisement

Godhumai Maavu Bonda Seivathu Eppadi

எப்போதும் மாலைப்பொழுதை இனிமையாகவும், சுவையானதாகவும் மாற்ற வேண்டும் என்று தான் அனைவரும் நினைப்பார்கள். அதுவும் மழைக்காலம் வந்து விட்டால் இத்தகைய எண்ணம் அனைவருக்கும் வந்து விடும். ஏனென்றால் மழைக்கால நேரத்தில் மாலைப்பொழுதில் சூடாக மற்றும் சுவையானதாக ஏதேனும் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைப்பார்கள். ஆகையால் என்ன மாதிரியான ஈவ்னிங் ஸ்னாக்ஸ் செய்யலாம் என்று யூடியூபில் தேடுவார்கள். இவ்வாறு தேடி நல்ல ரெசிபியாக எடுத்தாலும் கூட அதனை செய்ய தேவைப்படும் பொருட்கள் நம்முடைய வீட்டில் இருக்கிறதா என்ற சிந்தித்து ஈவ்னிங் ஸ்னாக்ஸ் செய்யாமலே அப்படியே விட்டு விடுவார்கள். ஆனால் இன்றைய பதிவில் சொல்லப்பட்டுள்ள ஈவ்னிங் ஸ்னாக்ஸை செய்ய கோதுமை மாவு மட்டுமே இருந்தால் போதும். அது ஒன்னும் இலங்க கோதுமை மாவு இனிப்பு போண்டா தான். சரி வாருங்கள் இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கோதுமை மாவு இனிப்பு போண்டா செய்வது எப்படி..?

பொருட்களின் அளவு செய்முறை விளக்கம்
கோதுமை மாவு- 2 கப் முதலில் 2 கப் கோதுமை மாவினை ஒரு பவுலில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
வெல்லம்- 1 1/2 அதன் பிறகு 1 1/2 அச்சு வெல்லத்தினை எடுத்துக்கொண்டு வெல்லப்பாகு தயார் செய்து கோதுமை மாவில் ஊற்ற வேண்டும்.
வாழைப்பழம்- 1 இப்போது பவுலில் உள்ள மாவுடன் 1 வாழைப்பழம், ஏலக்காய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்றாக 5 நிமிடம் வரை மாவினை பிசைய வேண்டும்.
ஏலக்காய்- 2
உப்பு- சிறிதளவு
கடாயில் எண்ணெய் அடுத்து கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்த உடன் மாவில் இருந்து சிறு சிறு உருண்டையாக உருட்டி எண்ணெயில் போட்டு சிவந்த உடன் எடுக்க வேண்டும்.
போண்டா தயார் இத்தகைய முறையில் மற்ற மாவினையும் போட்டு எடுத்தால் இனிப்பான கோதுமை மாவு போண்டா தயார்.

french fries recipe in tamil

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்!!!
Advertisement