இது மட்டும் தெரிஞ்சா மைதா மாவு பரோட்டா செய்யாமல் இந்த பரோட்டா தான் வேணுமுன்னு சொல்வீங்க..

godhumai parotta seivathu eppadi

கோதுமை பரோட்டா செய்வது எப்படி.?

பரோட்டா என்றால் யாருக்கும் பிடிக்காமல் இருக்குமா.! பரோட்டாவை பிச்சு போட்டு நடுவில் குருமாவை ஊற்றி சாப்பிட்டால் அதனின் ருசி அப்படி இருக்கும், படிக்கும் போதே சாப்பிட வேண்டும் என்று தோணுகிறதா.!பெரும்பாலும் கடையில் விற்கும் மைதா மாவு பரோட்டாவை தான் சாப்பிடுகிறார்கள். காரணம் ருசியாகவும், மென்மையாகவும் இருப்பதால் சாப்பிடுகின்றனர். இன்னும் சொல்ல போனால் மைதா மாவு பரோட்டா ஆரோக்கியத்திற்கு கெடுதல் என்று தெரிந்தும் சாப்பிடுகின்றனர். என்ன பண்றது சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது என்றால் மைதா மாவு பரோட்டா சாப்பிடாமல் கோதுமை மாவில் பரோட்டா செய்து சாப்பிடுங்க.. வாங்க கோதுமை மாவு பரோட்டா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

கோதுமை பரோட்டா செய்ய தேவையான பொருட்கள்:

கோதுமை பரோட்டா செய்முறை:

ஒரு பாத்திரம் எடுத்து அதில் ஒரு கப் கோதுமை மாவு எடுத்து கொள்ளவும். அதில் தேவையான அளவு உப்பு, சிறிதளவு சர்க்கரை, 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பிசைவது போல் பிசைந்து கொள்ளவும். இதை 10 நிமிடத்திற்கு அப்படியே வைக்க வேண்டும்.

கோதுமை பரோட்டா செய்வது எப்படி

பிறகு சப்பாத்தி கட்டையை எடுத்து அதில் பிணைந்து வைத்த மாவை எல்லாவற்றையும் சேர்த்து ஒரு ரோல் மாதிரி உருட்டி கொள்ளவும். பிறகு இதனை சிறிய சிறிய உருண்டையாக கட் செய்து கொள்ளவும்.

1 கப் கோதுமை மாவு மட்டும் போதும் ஹோட்டல் சுவையில் சில்லி பரோட்டா வீட்டிலேயே செய்யலாம்..!

கோதுமை பரோட்டா செய்வது எப்படி

அடுத்து சப்பாத்தி கட்டையில் கோதுமை மாவை தூவி கொள்ளவும். இதில் உருட்டி வைத்த மாவை மெல்லிதாக வரும் வரை தேய்க்க வேண்டும். மேல் பகுதியில் நெய்யை தடவி விட்டு  சிறிய சிறியதாக கட் செய்து கொள்ளவும்.

கோதுமை பரோட்டா செய்வது எப்படி

இதனை அப்படியே மேலே மேலே போட்டு கடைசி வரைக்கும் கொண்டு வரவும். இதனை வட்டமாக உருட்டி கடைசி பகுதியை மேலே வைத்து கையால் பிற செய்து கொள்ளவும்.

கோதுமை பரோட்டா செய்வது எப்படி

தேய்த்து வைத்த கோதுமை மாவை அடுப்பில் தவா வைத்து போட்டு கொள்ளவும். இதனை பிரட்டி பிரட்டி சிவந்த நிறம் வரும் வரை போட்டு எடுக்கவும்.

எப்போதும் இட்லி தோசையா அப்போ இந்த டிஸ் செய்து பாருங்கள்

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal