Gokulashtami Recipes
பொதுவாக நம்முடைய வீடுகளில் பண்டிகை நாட்கள் என்றால் இனிப்பு மற்றும் கார பலகாரங்களை செய்வார்கள். அதிலும் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஏற்ற மாதிரியான பலகாரங்களை செய்வார்கள். இப்படி இருக்கும் பட்சத்தில் அனைவருக்கும் எந்த பண்டிகையில் என்ன பலகாரம் செய்ய வேண்டும் என்றும், அதனை எப்படி செய்ய வேண்டும் என்றும் தெரிவது இல்லை. இதனை படி பார்க்கும் போது நாளை கோகுலாஷ்டமி வருகிறது. ஆகையால் இத்தகைய கோகுலாஷ்டமிக்கு செய்யக்கூடிய ஒரு ரெசிபியான வெல்ல சீடை செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
இனிப்பு சீடை செய்ய தேவையான பொருட்கள்:
- வெல்லம்- 1/4 கிலோ
- கறுப்பு எள்- 2 ஸ்பூன்
- நெய்- 1 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு- 3 ஸ்பூன்
- புழுங்கல் அரிசி- 1 கப்
- உப்பு- சிறிதளவு
- எண்ணெய்- தேவையான அளவு
சுரைக்காயில் மொறுவலான அடை தோசை அதுவும் 1/2 மணிநேரத்தில் செய்யலாம் வாங்க
இனிப்பு சீடை செய்வது எப்படி..?
முதலில் எடுத்துவைத்துள்ள புழுங்கல் அரிசியினை நன்றாக அலசி வெயிலில் காய வைத்து விட வேண்டும். அதன் பிறகு காய வைத்துள்ள புழுங்கல் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பினை மெஷினில் கொடுத்து அரைத்து மாவினை தயார் செய்து விடுங்கள்.
பின்பு அரைத்து வைத்துள்ள மாவினை சல்லடையால் நன்றாக சலித்து எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் ஒரு கடாயினை வைத்து அதில் சலித்த மாவினை சிறிது நேரம் வறுக்கவும். மேலும் எள்ளினையும் வெறும் சட்டியில் சேர்த்து வறுக்கவும்.
இப்போது 1/4 கிலோ வெல்லத்தினை ஒன்று இரண்டாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் சேர்த்து அதனுடன் நசுக்கிய வெல்லத்தினையும் சேர்த்து நன்றாக பாகு போல் தயார் செய்து கொள்ளுங்கள்.
கடைசியாக ஒரு பெரிய பாத்திரத்தில் வறுத்த அரிசி மற்றும் உளுந்து மாவு, எள், வெல்லப்பாகு மற்றும் 1 ஸ்பூன் நெய் சேர்த்து நன்றாக கலந்து கைகளால் பிசைந்து கொள்ளவும்.
அடுத்தபடியாக பிசைந்து வைத்துள்ள மாவினை சிறு சிறு உருண்டையாக கைகளில் ஒட்டவாதவாறு பிடித்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அடுப்பில் ஒரு கடாயினை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக்கொள்ளுங்கள்.
எண்ணெய் காய்ந்த பிறகு உருட்டி வைத்துள்ள சீடை உருண்டையினை அதில் போட்டு பொன் நிறமாக வந்தவுடன் எடுத்து விடுங்கள். இதை போலவே மற்ற உருண்டையினையும் போட்டு எடுத்துக்கொள்ளுங்கள்.
இத்தகைய முறையில் செய்தால் வெல்ல (அ) இனிப்பு சீடை தயார். எனவே நீங்களும் நாளை கோகுலாஷ்டமியில் இனிப்பு சீடையினை செய்து கிருஷ்ணரை வழிபடுங்கள்.
செட்டிநாடு மீன் வறுவல் செய்முறை
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |