Gongura Mutton Recipe in Tamil
இந்த உலகில் மனிதன் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் அதற்கு உணவு, உடை மற்றும் உறையுள் ஆகியவை மிக மிக முக்கியமாக தேவைப்படும். இதில் முதலாவதாக உள்ள உணவு என்பது அனைவருக்குமே மிகவும் முக்கியமான மற்றும் மிகவும் பிடித்த ஒன்று ஆகும். அதனால் நாம் தினமும் ஏதாவது ஒரு புதுவகையான உணவுகளை செய்து சுவைக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்குமே இருக்கும். அதிலும் குறிப்பாக அசைவ பிரியர்களுக்கு இந்த ஆசை அதிக அளவு இருக்கும். அதனால் தான் அவர்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் ஆந்திராவின் ஸ்பெஷல் ரெசிபியான கோங்குரா மட்டன் செய்வது எப்படி என்பதை பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இந்த ரெசிபியை உங்களது வீட்டில் செய்து சுவைத்து பாருங்கள்..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Andhra Style Gongura Mutton Recipe in Tamil:
அசைவ பிரியர்களுக்கு மிகவும் மட்டனை வைத்து மிகவும் சுவையான ஆந்திராவின் ஸ்பெஷல் ரெசிபியான கோங்குரா மட்டன் செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:
- மட்டன் – 1/2 கிலோ
- வெங்காயம் – 2
- தக்காளி – 1
- இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் – 2
- கோங்குரா இலைகள் – 1 கட்டு
- மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
- சிவப்பு மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
- கரம் மசாலா – 1 டீஸ்பூன்
- சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
- சோம்பு பொடி – 1 டீஸ்பூன்
- கொத்தமல்லி தூள் – 1 டீஸ்பூன்
- கிராம்பு – 3
- இலவங்கப்பட்டை – 1
- ஏலக்காய் – 2
- பிரியாணி இலை – 1
- சோம்பு – 1 டீஸ்பூன்
- சீரகம் – 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை – 1 கொத்து
- எண்ணெய் – 6 டேபிள் ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- தண்ணீர் – தேவையான அளவு
உங்க வீட்டுல பிரெட் இருக்க அப்போ இந்த ஸ்னாக்ஸ் ரெசிபியை செய்து சுவைத்து பாருங்க
செய்முறை:
ஸ்டேப் – 1
முதலில் அடுப்பில் ஒரு குக்கரை வைத்து அதில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றி அதில் நாம் எடுத்து வைத்துள்ள 3 கிராம்பு, 1 இலவங்கப்பட்டை, 2 ஏலக்காய், 1 பிரியாணி இலை, 1 டீஸ்பூன் சோம்பு, 1 டீஸ்பூன் சீரகம், 1 கொத்து கறிவேப்பிலை மற்றும் 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 2
பின்னர் அதனுடனே 2 பச்சை மிளகாய், 2 வெங்காயம் மற்றும் 1 தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள். பிறகு அதனுடனே 1/2 கிலோ மட்டனையும் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
1 கப் அவல் வைத்து செய்யும் இந்த ரெசிபி ஒன்று போதும் உங்க இரவு உணவை இனிமையாக்க
ஸ்டேப் – 3
அடுத்து அதில் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 2 டீஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள், 1 டீஸ்பூன் கரம் மசாலா, 1 டீஸ்பூன் சீரகப் பொடி, 1 டீஸ்பூன் சோம்பு பொடி, 1 டீஸ்பூன் கொத்தமல்லி தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
இப்பொழுது தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 முதல் 5 விசில் வைத்து நன்கு வேகவைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 4
மற்றொரு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றி அதில் 1 கட்டு கோங்குரா இலைகளை சேர்த்து பசைபோல் வருகின்ற அளவிற்கு நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 5
பின்னர் அதில் நா வேகவைத்துள்ள மட்டனையை சேர்த்து 5 முதல் 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கினால் நமது சுவையான கோங்குரா மட்டன் தயாராகிவிடும்.
மதிய உணவு சமைக்க வீட்டில் காய்கறி இல்லையா அப்ப உடனே இப்படி செஞ்சு அசத்துங்க
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |