கோதுமை மாவில் விரிசல் இல்லாத குண்டு குண்டு குலாப் ஜாமுன் செய்துபாருங்கள்..!

Gulab Jamun Recipe in Tamil

கோதுமை மாவு குலாப் ஜாமுன் செய்முறை – Gulab Jamun Recipe in Tamil

குலாப் ஜாமுன் இல்லாத தீபாவளியங்கா? இந்த ஆண்டு தீபாவளி வருவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டும் தான் இருக்கிறது. அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது குலாப் ஜாமுன் ரெசிபியை பற்றி தான். விரிசல் இல்லாமல் குலாப் ஜாமுன் செய்வது எப்படி என்று தான் பார்க்க போகிறோம். அதுவும் வீட்டிலேயே குலாப் ஜாமுன் மாவு தயார் செய்து இந்த தீபாவளியை அசத்த போகிறோம். சரி வாங்க இதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன, எப்படி செய்வது எப்படி என்று இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

குலாப் ஜாமுன் செய்ய தேவையான பொருட்கள்:

  1. கோதுமை மாவு – ஒரு கப்
  2. பால் பவுடர் – ஒரு கப்
  3. நெய் – இரண்டு ஸ்பூன்
  4. ஏலக்காய் பவுடர் – 1/2 ஸ்பூன்
  5. பேக்கிங் பவுடர் – 1/2 ஸ்பூன்
  6. தயிர் – ஒரு ஸ்பூன்
  7. காய்ச்சிய பால் – மாவு பிசைய தேவையான அளவு
  8. சர்க்கரை – இரண்டு கப்
  9. தண்ணீர் – 2 1/2 கப்
  10. எண்ணெய் – 1/2 லிட்டர்

 இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கேரளாவின் ஓணம் ஸ்பெஷல் காரம் மற்றும் புளிப்பு சுவைக்கொண்ட இஞ்சிப்புளி

குலாப் ஜாமுன் செய்முறை – Gulab Jamun Recipe in Tamil:Gulab Jamun Recipe in Tamil

ஒரு அகலமான பவுலை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் ஒரு கப் கோதுமை மாவு, ஒரு கப் பால் பவுடர், இரண்டு ஸ்பூன் நெய், அரை ஸ்பூன் பேக்கிங் பவுடர் மற்றும் தயிர் பேக்கிங் பவுடர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசையவும்.

பின்பு காய்ச்சி ஆறவைத்த பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு சாப்டாக பிசையவும், இந்த மாவானது சப்பாத்தி மாவு பிசையும் பதத்திற்கு இருக்க வேண்டும்.

பின்பு ஒரு சுத்தமான காட்டன் துணியை எடுத்துக்கொள்ளுங்கள் இந்த துணியயை கொண்டு பிசைந்து வைத்திருக்கும் மாவை காற்றுப்புகாத அளவிற்கு மூடி அதன் மேல் இன்னொரு பவுல் அல்லது பிளேட்டை போட்டு மூடி வைத்து 15 நிமிடங்கள் நன்கு ஊறவைக்கவும். அதற்கு நாம் சர்க்கரை பாகு தயார் செய்துவிடலாம்.

அதற்கு அடுப்பில் ஒரு அடிகனமான பாத்திரத்தை வைத்து அதில் இரண்டு கப் சர்க்கரை மற்றும் 2 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்துவிடவும், சர்க்கரை நன்கு கரைந்து கொதிக்கும் போது சர்க்கரை பாகினை தொட்டு பாருங்கள் பாகு கொஞ்சம் பிசுபிசுப்பு தன்மை வந்ததும் அவற்றில் அரை ஸ்பூன் ஏலக்காய் பவுடர் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள் பின்பு அடுப்பை அணைத்துவிடலாம்.

அதன் பிறகு பிசைந்து வைத்துள்ள குலாப் ஜாமுன் மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளுங்கள்.

பிறகு அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 1/2 லிட்டர் ஆயில் ஊற்றி சூடுபடுத்தவும், எண்ணெய் நன்கு சூடானதும் அடுப்பை முழுமையான மிதமான தீயில் வைத்து உருட்டி வைத்துள்ள குலாப் ஜாமுன் உருண்டைகளை சேர்த்து நன்கு பிரவுன் நிறத்தில் வரும் வரை பொரிக்கவும்.

பின்பு பொரித்த உருண்டைகளை சர்க்கரை பாகில் சேர்த்து இரண்டு மணி நேரம் வரை ஊறவைக்கவும்.

உங்களுக்கு விருப்பம் இருந்தால் குங்கும பூ மற்றும் பாதாம் பருப்பை பயன்படுத்தலாம்.

பிறகு அனைவரும் சாப்பிடு டேஸ்ட் பண்ணி பாருங்க. குலாப் ஜாமினில் எந்த விரிசலும் ஏற்படாது. கண்டிப்பாக இந்த முறையை உங்கள் வீட்டில் ட்ரை செய்து பாருங்கள்..

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மட்டன் மிளகு வறுவல் இப்படி செஞ்சி பாருங்க அப்படியொரு டேஸ்ட்டா இருக்கும்..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்!!!