Rose Gulkand Recipe in Tamil
ஹலோ பிரண்ட்ஸ்..! பொதுவாக வீட்டில் இருக்கும் போது ஏதாவது ஸ்வீட் ஆக செய்து சாப்பிட வேண்டும் என்று நினைப்போம். அதுவும் குழந்தைகளை பற்றி சொல்லவே வேண்டாம். தினமும் ஏதாவது செய்து தர சொல்லி அடம்பிடிப்பார்கள். அந்த நேரத்தில் என்ன செய்து தருவது என்று நம் அனைவருக்குமே ஒரு யோசனை இருக்கும். அதனால் தான் எங்கள் பதிவில் தினமும் ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபீஸ் பற்றி சொல்லிக்கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று மிகவும் அருமையான, தின்ன தின்ன திகட்டாத குல்கந்து வெறும் 5 நிமிடத்தில் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தின்ன தின்ன திகட்டாத குல்கந்து செய்வது எப்படி..?
உங்களுக்கு குல்கந்து பிடிக்குமா..? அப்போ குல்கந்து செய்ய என்னென்ன பொருட்கள் தேவை என்று கீழே காணலாம்.
- பன்னீர் ரோஜா – 1/4 கிலோ
- சர்க்கரை – 4 டேபிள் ஸ்பூன்
- சோம்பு – 2 ஸ்பூன்
- தேன் – 4 டேபிள் ஸ்பூன்
உங்கள் வீட்டில் வாழைப்பழம் உள்ளதா.. அப்போ இந்த ரெசிபியை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க
குல்கந்து செய்யும் முறை:
Step -1
முதலில் நல்ல நிலையில் உள்ள பன்னீர் ரோஜா இதழ்களை பறித்து எடுத்துக் கொள்ளுங்கள். பின் அதை சுத்தமாக கழுவி எடுத்து கொள்ளவும். அடுத்து அதை ஒரு மிக்சி ஜாரில் போட்டு லேசாக அரைத்து கொள்ளவும்.
Step -2
பின் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் அரைத்து எடுத்து வைத்துள்ள பன்னீர் ரோஜாவை போட்டு கொள்ளவும்.
Step -3
பிறகு அதில் சர்க்கரை 4 டேபிள் ஸ்பூன் அல்லது உங்களுக்கு எவ்வளவு இனிப்பு தேவையோ அந்தளவுக்கு சேர்த்து கொள்ள வேண்டும்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> உங்க வீட்ல பிரட் இருக்கா அப்போ இந்த ரெசிபி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.
Step -4
அதனுடன் சோம்பு 2 ஸ்பூன் மற்றும் தேன் 4 டேபிள் ஸ்பூன் அளவு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
Step -5
இவை அனைத்தும் சேர்ந்து நன்றாக கொதித்து வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட வேண்டும்.
அவ்வளவு தான் தின்ன தின்ன திகட்டாத குல்கந்து ரெடி. இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்து கொள்ளுங்கள். எத்தனை காலம் ஆனாலும் கெட்டுப்போகாது. இதனை 1 வாரம் கழித்து எடுத்து சாப்பிட்டால் சுவை சும்மா அள்ளும்..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |