ஆந்திர ஸ்பெஷல் குண்டூர் கொடி வெப்புடு செய்வது எப்படி ?

Advertisement

குண்டூர் கொடி வெப்புடு

அசைவ உணவு என்றாலே நமக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் கோழி வறுவல் என்றால் சொல்ல தேவையே இல்லை. அதுவும் கோழி வறுவளை நல்ல கரமாக செய்து சாப்பிட நமக்கு மிகவும் பிடிக்கும். காரமான சமையல் என்றால் அது ஆந்திர சமயலாக தான் இருக்கும். அதுவும் ஆந்திர ஸ்பெஷல் ரெசிபியான குண்டூர் கொடி வெப்புடு சுவையே தனி. சிக்கன் கொண்டு விதவிதமாக சமைக்க நினைக்கும் இல்லத்தரசிகளுக்கு இந்த குண்டூர் கொடி வெப்புடு ஒரு அற்புதமான சிக்கன் உணவு வகையாக இருக்கும். இன்றைய பதிவில் குண்டூர் கொடி வெப்புடு செய்வது எப்படி என்பதை முழுமையாக பார்க்கலாம் வாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

குண்டூர் ஸ்பெஷல் கொடி வெப்புடு செய்வது எப்படி?

குண்டூர் கொடி வெப்புடு செய்ய தேவையான பொருட்கள்:

கோழி – 1 கிலோ
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
இலவங்கப்பட்டை – 2
கிராம்பு – 10
ஏலக்காய் – 5
மிளகு – 2 தேக்கரண்டி
சீரகம் – 2 தேக்கரண்டி
நல்ல எண்ணெய் – 1 தேக்கரண்டி
நெய் -1 தேக்கரண்டி
வெங்காயம் – 2 கப்
பச்சை மிளகாய் – 5
மல்லி தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு

குண்டூர் கொடி வெப்புடு செய்முறை:

Guntur Kodi Vepudu:

Guntur kodi vepudu

ஒரு பாத்திரத்தில் கோழி கறி துண்டுகளை சிறிதாக வெட்டி எடுத்துக்கொள்ளவும்.

அதில் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் கறிவேப்பிலை  சேர்த்து நன்றாக கிளறி 30 நிமிடங்கள் வரை முடி வைக்கவும்.

பின்னர் Guntur kodi vepudu தேவையான மசாலாவை அரைத்து கொள்ளவும்.

ஒரு கடாயில் இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு,மல்லி மற்றும் சீரகம் சேர்த்து அவற்றின் பச்சை தன்மை நீங்கி வாசனை வரும்வரை வதக்கி எடுத்துக்கொள்ளவும்.

இப்போது குண்டூர் கொடி வெப்புடு செய்வதற்கான மசாலா தயாராகிவிட்டது.

பின்னர் ஒரு பாத்திரத்தை காய விட்டு அதில் தேவையான அளவு நெய் மற்றும் நல்ல எண்ணெய் சேர்த்துக்கொள்ளவும்.
பின்னர் அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும். அதில் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை தன்மை போகும் வரை வதக்கவும்.

பின்னர் இவற்றுடன் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அனைத்தும் மென்மையாக மாறும் வரை வதக்கவும்.

இப்போது அதனுடன் தயாரித்து வைத்துள்ள மசாலாவை சேர்க்கவும். இதனை நன்றாக கிளறிய பின்னர் தயாரித்து வைத்துள்ள கோழியை அதனுடன் சேர்க்கவும்.

மசாலாக்கள் கோழிக்கறிகளில் நன்றாக ஓட்டுமாறு நன்றாக கிளறி சமைக்கவும்.  அதிகம் தண்ணீர் சேர்க்காமல் சிறிது தண்ணீர் மட்டும் தெளித்து நன்றாக கிளறி வேக வைக்கவும்.

மசாலா மற்றும் கறி ஒன்றாக சேர்ந்த உடன் கட்சியாக கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

இது சாதம், சப்பாத்தி என அனைத்துக்கும் சிறந்த உணவாக இருக்கும்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்!!!
Advertisement