கோதுமை மாவு ரெசிபி
ஒவ்வொரு நாள் பொழுதிலும் என்ன சமைக்கிறது என்று யோசித்து கொண்டிருப்பார்கள். வேலைக்கு செல்கின்ற அவசரத்தில் காலை மற்றும் மதிய உணவு சமைப்பதற்காக அதிகாலையிலே எழுந்து சமைப்பார்கள். ஆனால் மாலை வீட்டுக்கு வந்ததும் டின்னர் என்ன சமைப்பது என்று யோசித்து கொண்டிருப்பார்கள். என்ன சமைப்பது என்று யோசிப்பது சீக்கிரம் டின்னர் முடிச்சுட்டு வந்து சீக்கிரம் தூங்கனும் என்று தான் நினைப்பார்கள். அதனால் தான் இந்த பதிவில் ஈசியான ஒரு ரெசிபியை பற்றி அறிந்து கொள்ள போகின்றோம்.
Healthy Dinner Recipes in Tamil:
தேவையான பொருட்கள் |
செய்முறை |
கோதுமை மாவு ஒரு- 1 கப் |
முதலில் ஒரு கப் கோதுமை மாவு எடுத்து சப்பாத்தி மாவு பிணைவது போல் பிணைந்து கொள்ள வேண்டும். நல்லா சாப்ட்டாக பிணைந்த பிறகு அதன் மேலே எண்ணெய் தடவி அப்படியே இருக்கட்டும். |
வெங்காயம், கேரட், தக்காளி- எல்லாவற்றிலும் 1 |
அடுத்து ஸ்டாபிங் செய்வதற்கு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும். |
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி |
எண்ணெய் சூடான பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், கேரட், தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், சிறிதளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும். |
மல்லி தூள் – 1 தேக்கரண்டி |
அடுத்து அதில் மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வேக விட வேண்டும். |
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி |
அதன் பிறகு பிணைந்து வைத்துள்ள மாவை சப்பாத்தி தேய்ப்பது போல தேய்த்து கொள்ள வேண்டும். |
இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 தேக்கரண்டி |
ஒரு சப்பாத்தியை எடுத்து அதன் உள்பகுதியில் செய்து வைத்துள்ள மசாலாவை வைக்க வேண்டும். அதன் பிறகு ஒரு சப்பாத்தியை வைத்து close செய்ய வேண்டும். மறுபடியும் இதே போல் இரண்டு முறை வைக்க வேண்டும். மொத்தமாக 6 சப்பாத்தி இருக்க வேண்டும். |
எண்ணெய் – 2 தேக்கரண்டி |
இதனை இட்லி பானையில் வைத்து வேக விட வேண்டும். 10 நிமிடம் வெந்த பிறகு தோசை கல்லில் வைத்து சிவந்த நிறம் வரும் வரை வேக விட வேண்டும். |
உப்பு- தேவையான அளவு |
எல்லா புறமும் சிவந்த நிறம் வந்ததும் எடுத்து பரிமாறுங்கள். |
கோதுமை மாவு இருந்தால் போதும் வித்தியாசமான பூரி ரெபிசி இப்படி செய்யலாம்..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> |
சமையல் குறிப்புகள்!!! |