Ayira Meen Kulambu
மீன் குழம்பு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அதிலும் அயிரை மீன் குழம்பை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். கிராமத்தில் இந்த அயிரை மீனை அதிகம் சமைப்பார்கள். அதிலும் குறிப்பாக மழைக்காலங்களில் இந்த மீனை அதிகம் சமைப்பார்கள். எத்தனையோ வகை மீன்களை சாப்பிட்டாலும் மதுரையில் கிடைக்கக்கூடிய அயிரை மீன் குழம்பிற்கு ஈடாக முடியாது என்று சொல்வார்கள். அவர்கள் சொல்வதற்கு ஏற்றவாறு அதன் மனமும் சுவையும் ஆளையே இழுக்கும். எனவே அந்த வகையில் நீங்கள் வீட்டில் சுவையான அயிரை மீன் குழம்பு செய்ய வேண்டுமானால் இப்பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How To Make Ayira Meen Kulambu Recipe in Tamil:
தேவையான பொருட்கள்:
- அயிரை மீன்
- நல்லெண்ணெய் – 4 ஸ்பூன்
- கடுகு – 1 ஸ்பூன்
- வெந்தயம் – 1 ஸ்பூன்
- மிளகு – 1/2 ஸ்பூன்
- பச்சை மிளகாய் – 2
- பூண்டு – 5 பற்கள்
- கருவேப்பிலை – 2 கொத்து
- சின்ன வெங்காயம் – 25
- தக்காளி – 2 தக்காளி
- உப்பு – தேவையான அளவு
- மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
- குழம்பு தூள் – 4 ஸ்பூன்
- புளிக்கரைசல் – 1/2 கப்
- தேங்காய் பேஸ்ட் – 1/4 கப்
செய்முறை:
ஸ்டேப் -1
முதலில் அயிரை மீனை நன்கு சுத்தம் செய்து எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -2
இப்போது, அடுப்பில் ஒரு மண் சட்டியை வைத்து அதில் நல்லெண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -3
எண்ணெய் சூடானதும், அதில் கடுகு, வெந்தயம் மற்றும் மிளகு சேர்த்து பொரிய விடுங்கள். அதன் பிறகு, அதில் இரண்டாக கீறிய பச்சை மிளகாய் மற்றும் லேசாக இடிச்ச பூண்டினை சேர்த்து கொள்ளுங்கள்.
நாளைக்கு ஐப்பசி 1 வஞ்சிரம் மீன் வறுவல் இப்படி செஞ்சு பாருங்க
ஸ்டேப் -4
அடுத்து, இதனுடன் கருவேப்பிலை, நறுக்கிய சின்ன வெங்காயம் நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
ஸ்டேப் -5
வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் தக்காளியை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். பின்பு, இதுனுடன் மஞ்சள் தூள், குழம்பு தூள் மற்றும் குழம்பிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கி விடுங்கள்.
ஸ்டேப் -6
இப்போது, இதில் கரைத்து வைத்த புளிக்கரைசல் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடுங்கள். உங்களுக்கு விருப்பமானால் தேங்காய் பேஸ்டும் சேர்த்து கொதிக்க விடுங்கள்.
ஸ்டேப் -7
அதன் பிறகு, சுத்தம் செய்து வைத்துள்ள அயிரை மீனை சேர்த்து 5 முதல் 7 நிமிடம் வரை வேகவைத்து இறுதியாக 1 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து இறக்கினால் சுவையான மதுரை ஸ்பெஷல் அயிரை மீன் குழம்பு ரெடி.!
தாறுமாறான சுவையில் விரால் மீன் வறுவல் வீட்டிலேயே செய்வது எப்படி..?
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |