Carrot Bajji
பொதுவாக பெரும்பாலான குழந்தைகள் கேரட் சாப்பிடவே மாட்டார்கள். ஆனால் கேரட்டில் உடல் வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி6, வைட்டமின் கே, பையோடின், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் தையமின் போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன. இவ்வளவு சத்துக்கள் நிறைந்த கேரட்டை குழந்தைகள் சாப்பிடுவதை தவிர்த்து விடுகிறார்கள். எனவே அவர்களுக்கு பிடித்த விதத்தில் செய்து தருவதன் மூலம் விரும்பி சாப்பிடுவார்கள். எப்படி என்றுதானே கேட்குறீர்கள்.. அதாவது குழந்தைகளுக்கு பெரும்பாலும் பஜ்ஜி, வடை போன்ற உணவுகள் மிகவும் பிடிக்கும். எனவே நீங்கள் கேரட்டில் பஜ்ஜி செய்து தருவதன் மூலம் அதன் விரும்பி சாப்பிடுவார்கள். ஓகே வாருங்கள் கேரட் பஜ்ஜி செய்வது எப்படி என்று பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How To Make Carrot Bajji in Tamil:
தேவையான பொருட்கள்:
- எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
- கேரட் – 1/4 கிலோ
- கடலை மாவு – 2 கப்
- அரிசி மாவு – 1/2 கப்
- ஓமம் – 1 டீஸ்பூன்
- மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
- சாட் மசாலா – 1/2 டீஸ்பூன்
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 டீஸ்பூன்
- பேக்கிங் சோடா – 1/4 டீஸ்பூன்
செட்டிநாட்டில் தக்காளிகாய் பச்சடி இப்படி தான் செய்வாங்களாம்.. உங்களுக்கு தெரியுமா..?
கேரட் பஜ்ஜி செய்முறை:
ஸ்டேப் -1
முதலில் கேரட்டை நன்றாக கழுவி விட்டு அதன் தோலை நீக்கி கொள்ளுங்கள். அதன் பிறகு கேரட்டை மெல்லியதாக வட்ட வடிவில் வெட்டி எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -2
இப்போது, ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, ஓமம், மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பிறகு தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -3
தண்ணீர் சேர்க்கும் போது சிறிது சிறிதாக ஊற்றி சரியான அளவில் மாவை கலந்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -4
அடுத்து, தாளிப்பு கரண்டியில் 2 ஸ்பூன்அளவிற்கு எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தி கொள்ளுங்கள். இதை கலந்து வைத்த மாவில் ஊற்றி கொள்ளுங்கள். (சூடான எண்ணெய் ஊற்றுவதன் மூலம் பஜ்ஜி மொறுமொறுப்பாக வரும்.)
ஸ்டேப் -5
பிறகு பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கிளறி விட்டு 15 நிமிடங்கள் அப்படியே வைத்து ஊறவிடுங்கள்.
ஸ்டேப் -6
அதன் பின் அடுப்பில் ஒரு கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தி கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும் அதில் நறுக்கி வைத்த கேரட்டை தயார் செய்து வைத்துள்ள பஜ்ஜி மாவில் மூழ்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொறித்தெடுங்கள்.
அவ்வளவுதாங்க.. 20 நிமிடத்தில் ஆரோக்கியமான சுவையான கேரட் பஜ்ஜி ரெடி..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |