How To Make Chilli Parotta Recipe in Tamil
பரோட்டா என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் பரோட்டாவில் கொத்து பரோட்டா, நூல் பரோட்டா, சில்லி பரோட்டா என்றால் சொல்லவே வேண்டாம். ஏனென்றால் இவற்றை எல்லாம் அனைவருக்கும் பிடிக்கும். அதனால் எப்படியாவது மாதத்திற்கு ஒரு முறையாவது ஹோட்டலுக்கு சென்று பரோட்டா சாப்பிட்டு வருவோம். ஆனால் இனி ஹோட்டலுக்கு போகாமலே வீட்டிலே சாப்பிடலாம். அதாவது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சில்லி பரோட்டா வீட்டிலே செய்வது எப்படி என்பதை தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். எனவே இப்பதிவை முழுவதுமாக பிடித்து சில்லி பரோட்டா வீட்டிலே எப்படி சுவையாக செய்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
How To Make Chilli Parotta in Tamil:
தேவையான பொருட்கள்:
- பரோட்டா- 4
- எண்ணெய்- 3 ஸ்பூன்
- பூண்டு- 5 பற்கள்
- இஞ்சி- 1 துண்டு
- பச்சை மிளகாய்- 2
- கறிவேப்பிலை- 2 கொத்து
- வெங்காயம்- 1
- குடை மிளகாய்- 1
- தக்காளி- 2
- உப்பு- தேவைக்கேற்ப
- மிளகாய் தூள்- 2 ஸ்பூன்
- மல்லித்தூள்- 1 ஸ்பூன்
- கரம் மசாலா- 1 ஸ்பூன்
- சில்லி சாஸ்- 1 ஸ்பூன்
- தக்காளி கெட்ச் அப்- 2 ஸ்பூன்
- கொத்தமல்லி இலை- சிறிதளவு
சில்லி பரோட்டா எப்படி செய்வது.?
ஸ்டேப்- 1
முதலில் பரோட்டாவை சரியான அளவில் சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 2
இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும் அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து 1 நிமிடம் வதக்கி கொள்ளுங்கள்.
ஹோட்டல் சுவையில் பரோட்டா இனி வீட்டிலேயே செய்யலாம்
ஸ்டேப்- 3
1 நிமிடம் கழித்த பிறகு, இதில் பெரிய துண்டுகளாக நறுக்கிய வெங்காயம் மற்றும் குடை மிளகாயை சேர்த்து கொள்ளுங்கள. அடுத்து, தக்காளியின் விதைகளை நீக்கி விட்டு நறுக்கிய இதனுடன் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 4
இவை நன்றாக வதங்கியதும், அதில் மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.
ஸ்டேப்- 5
பிறகு, 5 நிமிடம் நன்றாக வதங்கியதும், இதில் சில்லி சாஸ் மற்றும் தக்காளி கெட்ச் அப் சேர்த்து நன்றாக கலந்து விடவும். அடுத்து இதனுடன் நறுக்கி வைத்த பரோட்டா துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் வரை வதக்கிக் கொள்ளுங்கள்.
ஹோட்டல் ஸ்டைல் நூல் பரோட்டா செய்வது எப்படி
ஸ்டேப்- 6
அதன் பின், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான சில்லி பரோட்டா தயார்.!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |