Non Veg Like Veg Dishes in Tamil
புரட்டாசி மாதம் வந்துவிட்டாலே போதும் அசைவ பிரியர்கள் அனைவரும் எப்படா இந்த புரட்டாசி முடியும்.. எப்படா அசைவ உணவு சாப்பிடுறது என்று நினைத்து கொண்டே இருப்பார்கள். அதிலும் மட்டன் பிரியர்கள் அதிகம். அப்படி உள்ள அசைவ பிரியர்கள் புரட்டாசி மாதத்திலும் அசைவ ருசியில் செய்யக்கூடிய உணவுகளை செய்து சாப்பிடலாம். எனவே அசைவ ருசியில் உள்ள உணவுகளில் ஒன்றான மட்டன் இல்லாத மட்டன் குழம்பு செய்வது எப்படி என்பதை இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.
Non Veg Taste in Veg Food in Tamil:
தேவையான பொருட்கள்:
- மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 3 சிட்டிகை
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 3 டேபிள் ஸ்பூன்
- உப்பு – சிறிதளவு
- எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
- சோம்பு – 1 ஸ்பூன்
- பட்டை – 3
- ஏலக்காய் – 3
- கிராம்பு – 4
- கசகசா – 1/2 டீஸ்பூன்
- ஸ்டார் பூ – 1
- பிரியாணி இலை – 2
- மல்லி தூள் – 3 டேபிள் ஸ்பூன்
- மிளகு தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- சீரக தூள் – 1/2 ஸ்பூன்
- பச்சை மிளகாய் – 3
- நறுக்கிய வெங்காயம் – 2
- நறுக்கிய தக்காளி – 2
- உருளை கிழங்கு – 2
- முருங்கைக்காய் –1
- கத்தரிக்காய் – 2
- தேங்காய் பேஸ்ட் – 1/2 கப்
How To Make Non Veg Taste in Veg Food in Tamil:
ஸ்டேப் -1
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் சோம்பு சேர்த்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -2
அதன் பிறகு, அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாயினை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
ஸ்டேப் -3
நன்கு வதங்கியதும் அதில், நறுக்கிய உருளை கிழங்கு, முருங்கைக்காய் மற்றும் கத்தரிக்காயை சேர்த்து மேலும் இதற்கு தேவையான உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -4
இந்நிலையில் குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவையுங்கள். குழம்பு கொதிக்க தொடங்கியதும் அதில் மிளகாய்த்தூள், மல்லி தூள், மிளகு தூள் மற்றும் சீரக தூள் சேர்த்து கொதிக்க வையுங்கள்.
ஸ்டேப் -5
குழம்பில் உள்ள காய்கறிகள் வெந்ததும் அதில் அரைத்து வைத்த தேங்காய் பேஸ்டினை சேர்த்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -6
பிறகு, குழம்பு நன்றாக கொதித்து வரும் நிலையில் அடுப்பை ஆஃப் செய்து குழம்பை இறக்கி விடுங்கள்.
ஸ்டேப் -7
அடுத்தாக, அடுப்பில் ஒரு தாளிப்பு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும் அதில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, கசகசா ஸ்டார் பூ மற்றும் பிரியாணி இலை சேர்த்து தாளித்து குழம்பில் ஊற்றி விடுங்கள்.
அவ்வளவு தாங்க.. மட்டன் இல்லாத மட்டன் குழம்பு ரெடி..
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |