Hyderabadi Chicken Fry Recipe in Tamil
பொதுவாக நாம் அனைவருக்குமே உணவு என்றால் மிக மிக பிடிக்கும். அந்த உணவை நாம் இரண்டு வகையாக பிரித்து வைத்துள்ளோம். அதாவது சைவ உணவு மற்றும் அசைவ உணவு. இதில் சைவ உணவு வகையை சிலருக்கு மிகவும் பிடிக்கும். அதேபோல் அசைவ உணவினை சிலருக்கு மிகவும் பிடிக்கும். அப்படி அசைவ உணவினை மிகவும் பிடித்த நபர்களுக்கு மிக மிக பிடித்து விரும்பி சாப்பிடுவது சிக்கன் தான். அசைவ பிரியர்கள் அனைவரின் உணவு பட்டியலிலும் இந்த சிக்கன் இடம் பெற்றிருக்கும். அப்படி அசைவ பிரியர்கள் அனைவருக்கும் பிடித்த சிக்கனை ஒரே முறையிலேயே செய்து சுவைத்து சலித்து போய்விட்டதா. அப்படி என்றால் இன்றைய பதிவு உங்களுக்கு தான். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் மிகவும் சுவையான ஹைதராபாத் சிக்கன் Fry செய்வது எப்படி என்பதை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
ஹைதராபாத் சிக்கன் செய்முறை:
அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த ஹைதராபாத் சிக்கன் Fry செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:
- சிக்கன் – 1/2 கிலோ
- வெங்காயம் – 3
- தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
- எலுமிச்சை பழசாறு – 1 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள்தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
- சீரகத்தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
- சோம்புத்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- மிளகாய்த்தூள் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
- மல்லித்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- கரம்மசாலா – 1 டேபிள் ஸ்பூன்
- மிளகுத்தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
- பச்சைமிளகாய் – 1
- கருவேப்பிலை – 1 கொத்து
- கொத்தமல்லி இலை – 1 கைப்பிடி அளவு
- இஞ்சிபூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
- எண்ணெய் – தேவையான அளவு
- பட்டை – 2
- அன்னாசி பூ – 1
- ஏலக்காய் – 2
- கிராம்பு – 4
- உப்பு – தேவையான அளவு
லஞ்சிக்கு வெறும் 10 நிமிடத்தில் சுவையான வேர்க்கடலை சாதம் செய்வது எப்படி
செய்முறை:
ஸ்டேப் – 1
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 3 வெங்காயத்தை நன்கு பொடி பொடியாக நறுக்கி கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய்யை ஊற்றி நாம் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு வறுத்து எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 2
பின்னர் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் நாம் வாங்கி வைத்துள்ள 1/2 கிலோ சிக்கனை சேர்த்து அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் தயிர், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை பழசாறு, 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூள், 1/2 டேபிள் ஸ்பூன் சீரகத்தூள், 1 டேபிள் ஸ்பூன் சோம்புத்தூள், 1 1/2 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள், 1 டேபிள் ஸ்பூன்
மல்லித்தூள், 1 டேபிள் ஸ்பூன் கரம்மசாலா1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள் 1 டேபிள் ஸ்பூன் மற்றும் இஞ்சிபூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
ஆந்திர ஸ்பெஷல் கோங்குரா மட்டன் இப்படி ஒருமுறை செய்து சுவைத்து பாருங்க
ஸ்டேப் – 3
அதனுடனே 1 பச்சைமிளகாய், 1 கொத்து கருவேப்பிலை மற்றும் 1 கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை ஆகியவற்றை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள். பிறகு அதில் நாம் முன்னரே வறுத்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு கலந்து 1 மணிநேரம் நன்கு ஊறவிடுங்கள்.
ஸ்டேப் – 4
பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றி அதில் 2 பட்டை, 1 அன்னாசி பூ, 2 ஏலக்காய் மற்றும் 4 கிராம்பு ஆகியவற்றை சேர்த்து கொள்ளுங்கள். பின்னர் அதனுடனே நாம் கலந்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு கலந்து 10 நிமிடங்கள் நன்கு வேகவைத்து இறக்கினால் நமது சுவையான ஹைதராபாத் சிக்கன் தயார்.
உங்க வீட்டுல பிரெட் இருக்க அப்போ இந்த ஸ்னாக்ஸ் ரெசிபியை செய்து சுவைத்து பாருங்க
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |