வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கத்தரிக்காயில் இப்படி ஒரு ரெசிபி யாரும் செஞ்சிருக்க மாட்டீங்க.

Updated On: June 24, 2023 7:59 AM
Follow Us:
idicha kathirikai recipe
---Advertisement---
Advertisement

கத்திரிக்காய் ரெசிபி

கத்திரிக்காய் பலருக்கும் பிடிக்காத ஒன்று, கத்திரிக்காயை குழம்பில் சேர்த்தால் யாரும் சாப்பிட மாட்டார்கள். பிடிக்காத காய்கறியை கூட வித்தியாசமாக செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள். அதனால் இன்றைய பதிவில் கத்திரிக்காயில் இடிச்ச கத்திரிக்காய் பொடி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

இடிச்ச கத்திரிக்காய் செய்ய தேவையான பொருட்கள்:

  1. கத்திரிக்காய்-4
  2. எண்ணெய்- 1/2 லிட்டர்
  3. மிளகாய் தூள்- காரத்திற்கேற்ப
  4. வேர்க்கடலை- ஒரு கைப்பிடி
  5. பூண்டு- 4 பல்
  6. காய்ந்த மிளகாய்- 7
  7. மல்லி விதை- சிறிதளவு
  8. சீரகம்- சிறிதளவு
  9. கடலை மாவு- 2 தேக்கரண்டி
  10. அரசி மாவு- 2 தேக்கரண்டி
  11. உப்பு- தேவையான அளவு

இடிச்ச கத்திரிக்காய் செய்முறை:

இடிச்ச கத்திரிக்காய் செய்முறை

ஒரு கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, வேர்க்கடலை சேர்த்து வதக்கி தனியாக எடுத்து கொள்ளவும். பிறகு அதே கடாயில் பூண்டு, காய்ந்த மிளகாய் 7, மல்லி விதை, சீரகம் சிறிதளவு சேர்த்து வதக்கி எடுத்து கொள்ளவும்.

வதக்கிய பொருட்கள் அனைத்தையும் மிக்சி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் பொடியாக  அரைத்து கொள்ளவும்.

கத்திரிக்காய் கிரேவி இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்

அடுத்து 4 கத்திரிக்காயை நீட்ட வடிவில் மெல்லிதாக நறுக்கி கொள்ளவும். இதனுடன் கடலை மாவு 2 தேக்கரண்டி, 2 தேக்கரண்டி அரசி மாவு, மிளகாய் தூள் காரத்திற்கேற்ப, தேவையான அளவு உப்பு சேர்த்து மிஸ்ட் செய்து கொள்ளவும். முக்கியமாக தண்ணீர் ஊற்றாமல் மிக்ஸ் செய்து கொள்ளவும்.

பிறகு கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும். மிக்ஸ் சேட்டு வைத்துள்ள கத்திரிக்காயை எண்ணெயில் சேர்த்து பொரித்து கொள்ளவும். பொறித்த கத்திரிக்காய் ஆறியதும் செய்து வைத்துள்ள மசாலாவுடன் சேர்த்து  பொடியாக அரைத்து கொள்ளவும். அவ்ளோ தாங்க இடிச்ச கத்திரிக்காய் ரெடி.! இதை தயிர்சாதம், கஞ்சி சாதம் போன்றவற்றிற்கு சுவையாக இருக்கும். இதை தண்ணீர் படாமல் வைத்திருந்தால் நான்கு நாட்களுக்கு வீணாகாமல் இருக்கும்.

சப்பாத்திக்கு இப்படி ஒருமுறை Mushroom Gravy செய்து சுவைத்து பாருங்கள்

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now