இஞ்சி பூண்டு சட்னி
பொதுவாக இட்லி, தோசைக்கு சட்னி, சாம்பார், பொடி ஏதாவது இருந்தால் தான் சாப்பிட முடியும். அதுவும் ஒரே மாதிரியான சட்னி செய்து சாப்பிட்டால் போர் அடித்து விடும். விதமா விதமாய் சட்னி செய்து சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்கு மாறாக வீட்டில் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி இது போல தான் செய்து சாப்பிடுவோம். அதனால் தான் இந்த பதிவில் ஒரு அருமையான சட்னி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
தேவையான பொருட்கள் | செய்முறை |
இஞ்சி துண்டு- 1 கப் | முதலில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் காய்ந்த மிளகாயை சேர்த்து வதக்க வேண்டும். காய்ந்த மிளகாய் ஆனது சிவந்த நிறம் வந்ததும் தனியாக எடுத்து வைக்க வேண்டும். |
பூண்டு- 20 பற்கள் | காய்ந்த மிளகாய் ஆனது சிவந்த நிறம் வந்ததும் தனியாக எடுத்து வைக்க வேண்டும். |
காய்ந்த மிளகாய்- 10 | அதன் பிறகு இஞ்சியை சின்ன சின்னதாக நறுக்க வேண்டும். |
புளி- தேவைக்கேற்ப | இதனையும் சேர்த்து வதக்க வேண்டும், பின் அதனுடன் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். |
கடுகு, உளுத்தப்பருப்பு- சிறிதளவு | அடுத்து ஒரு மிக்சி ஜார் எடுத்து அதில் வதக்கிய பொருட்கள் சேர்க்க வேண்டும். பிறகு அதனுடன் சிறிதளவு உப்பு, சிறிதளவு வெல்லம் சேர்த்து அரைத்து கொள்ளவும். |
வெல்லம்- சிறிய துண்டு | அடுத்து தாளிப்பதற்கு ஒரு கடாய் வைத்து அதில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கொள்ளவும், |
எண்ணெய்- தேவையான அளவு | அதனுடன் கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை சேர்த்து வதக்கி விட்டு அரைத்து வைத்த சட்னியை சேர்க்க வேண்டும். |
உப்பு தேவையான அளவு | அவ்ளோ தான் இந்த சட்னியை இட்லி, தோசைக்கு வைத்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும். |
குழந்தைகளுக்கு இந்த மாதிரி பூண்டு சட்னி செய்து கொடுங்கள்
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |