கேரளாவின் ஓணம் ஸ்பெஷல் காரம் மற்றும் புளிப்பு சுவைக்கொண்ட இஞ்சிப்புளி

Advertisement

இஞ்சிப்புளி செய்வது எப்படி ?

வீட்டில் இருந்தே சுவையான கேரளா ஸ்டைலில் ஒரு சுவையான ரெசிபி. கேரளா என்றால் அங்கு பிரசித்திபெற்றது ஓணம் தான். அந்த ஓணம் பண்டிகையில் எண்ணற்ற வகையான உணவு சமைப்பார்கள். அந்த வகையில் இன்று கேரளாவின் ஸ்பெஷல் உணவான இஞ்சிப்புளி எப்படி செய்வது என்று பார்க்கலாம். சிலருக்கு இந்த ரெசிபி செய்ய தெரியாமல் கூட இருக்கலாம். அந்த கவலையை போக்க இதோ உங்களுக்காகவே ஈஸியான முறையில் இஞ்சிப்புளி செய்முறை விளக்கத்தை கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள். சரி வாருங்கள் இப்போ இந்த ரெசிபியை எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

சுவையான இஞ்சிப்புளி செய்வது எப்படி ?

தேவையான பொருட்கள்:

இஞ்சி – 3/4 கப்
பச்சை மிளகாய் – 7
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
வெல்லப் பாகு – 1 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
கடுகு – 3/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
வரமிளகாய் – 2

இஞ்சிப்புளி செய்முறை:

image

முதலில் புளி நன்றாக கரைத்து சாறு எடுத்துக்கொள்ளவும்.

பின்னர் வெந்தயத்தை லேசாக வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

அடுத்ததாக ஒரு காடாயில், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கருவேப்பிலை மற்றும் வரமிகளாய் சேர்த்து தாளிக்கவும்.

பின்னர் அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின்னர் புளிக்கரைசல் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். புளிக்கரைசல் கெட்டியாக மாறிய பின்னர் அதில் வெல்ல பாகு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும். கடைசியாக அரைத்துவைத்துள்ள வெந்தய பொடியை சேர்த்து சில நிமிடம் நன்றாக கிளறிய பின்னர் இறக்க வேண்டும்.

இப்போது காரம் மற்றும் புளிப்பு சுவையுடன் இஞ்சிப்புளி ரெடி.

கண்ணனுக்கு பிடித்த வெண்ணெயுடன்…கிருஷ்ண ஜெயந்தி special பாதாம் கீர்

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்!!!
Advertisement