Instant Dosa
காலை நேர உணவுக்கு சரியான தேர்வாக இருப்பது இட்லி மற்றும் தோசை தான். அந்த இட்லி ஆரோக்கியானதாக இருப்பதை விட ஈசியாக செய்தும் விடலாம். இட்டலி சீக்கரம் ஜீரணம் ஆக கூடியது. ஆனால் இட்லி தோசை தயாரிக்க தேவையான மாவு தயாரிக்க நமக்கு அதிக நேரம் தேவைப்படும். என்ன தான் இப்போது கடைகளில் இட்லி மாவுகள் கிடைத்தாலும் அது நமது உடல் நமது ஆரோக்கியத்திற்கு சிறந்ததா என்றால் கேள்வி குறிதான்.
இது நமக்கு தெரிந்தே இருந்தாலும், நாம் அதனை தான் வணங்குகின்றோம் காரணம் நேரமின்மை. அவசரமாக காலையில் பணிக்கு கிளம்பும் நமக்கு
இட்லி தோசை சரியானதாக இருந்தாலும், மாலை நேரத்தில் பணி முடிந்து இட்லி தோசைக்கான மாவு அரைப்பதற்கு நேரமும் இருப்பதில்லை உடலும் ஒத்துழைப்பதுதில்லை. இந்த பிரச்சனைக்கு தீர்வாக இன்றைய பதிவில் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள். அரிசி உளுந்து இல்லாமல் 10 நிமிடத்தில் சுவையை தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Instant Aval Dosa Recipe in Tamil:
instant தோசைக்கு தேவையான பொருட்கள்:
அவல் – 1 கப்
ரவா – 1 கப்
தயிர் – 1/4 கப்
உப்பு – தேவையான அளவு
இட்லி மாவு இல்லாத நேரம் இட்லி வேணும் என்றால் இந்த மாதிரி இட்லி செய்து சாப்பிடுங்கள்
instant தோசை செய்முறை:

அவல் மற்றும் ரவை ஆகிய இரண்டையும் 20 நிமிடங்கள் உறவைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதனை தயிர் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அந்த மாவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நீங்கள் தோசை வார்க்கலாம்.

அல்லது அந்த மாவுடன் வெங்காயம் மிளகாய் சேர்த்து தோசை வார்க்கலாம்.

இப்போது சுவையான instant தோசை ரெடி.
காலை நேர பரப்பப்பில் எளிமையாக செய்து இட்லி பொடி, தேங்காய் சட்டினியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
வாயில் வைத்ததும் வழுக்கி ஓடும் மிகவும் சுவையான பாதாம் அல்வா இப்படி செய்யுங்க
| இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |














