Easy Healthy Dinner Recipes in Tamil
ஒவ்வொரு நாளும் காலை, மதியம் மற்றும் இரவு உணவு என்ன சமைப்பது என்பதே பெரிய விஷயமாக இருக்கிறது. இதனால் அனைவருமே ஒவ்வொரு நாளும் புதுவிதமான உணவுகளை சமைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் புதுசா கோதுமை மாவை வைத்து சத்தான டின்னர் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Liquid Paratha Recipe in Tamil:
தேவையான பொருட்கள்:
- கோதுமை மாவு – 2 கப்
- மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
- உப்பு – 1/2 ஸ்பூன்
- எண்ணெய் – 2 ஸ்பூன்
- கடுகு – 1/2 ஸ்பூன்
- கடலை பருப்பு – 1 ஸ்பூன்
- உளுத்தப்பருப்பு – 1 ஸ்பூன்
- சீரகம் – 1 ஸ்பூன்
- பெரிய வெங்காயம் – 1
- இஞ்சி – 1 துண்டு
- பச்சை மிளகாய் – 2
- கருவேப்பிலை – 2 கொத்து
- பெருங்காய தூள் – 1/4 ஸ்பூன்
- தக்காளி – 1
- கொத்தமல்லி இலை – 1 கைப்பிடி
- நெய் – தேவையான அளவு
செய்முறை:
ஸ்டேப் -1
முதலில், ஒரு பெரிய அகலமான பாத்திரத்தை எடுத்து கொள்ளுங்கள். அதில், கோதுமை மாவு, மஞ்சள் தூள் மற்றும் 1/2 ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -2
பிறகு, இதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மாவு பதத்திற்கு வரும்வரை நன்கு கலந்து கொள்ளுங்கள்.
15 நிமிடத்தில் டின்னர் செய்யலாம் வாங்க..
ஸ்டேப் -3
இப்போது, அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில், எண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, கடலை பருப்பு, உளுத்தப்பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து நன்கு கிளறி விடுங்கள்.
ஸ்டேப் -4
கடுகு பொரிந்ததும், அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி இலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 3 நிமிடம் வரை நன்கு வதக்கி விடுங்கள்.
ஸ்டேப் -5
அதன் பிறகு, பெருங்காய தூள், உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து 5 நிமிடம் வரை நன்கு வதக்கி இறக்கி விடுங்கள்.
ஸ்டேப் -6
இதனை சிறிது நேரம் ஆறவைத்து, தயார் செய்து வைத்துள்ள மாவில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -7
இந்நிலையில், அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து மாவினை ஊற்றி, இரண்டு புறமும் நன்கு சிவரவிட்டு எடுத்தால் சுவையான டின்னர் தயார்.!
All Time Favorite ஆலு பரோட்டா இனி உங்க வீட்டிலும் எளிமையாக பண்ணலாம்
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |