Javvarisi Payasam Recipe in Tamil | ஜவ்வரிசி பாயாசம் செய்வது எப்படி.?
பொதுவாக நமது தமிழ் பாரம்பரியத்தின் படி ஏதாவது ஒரு விழா அல்லது ஏதாவது ஒரு சுப காரியம் நடைபெறுகின்றது அல்லது சுப நாள் என்றால் அன்று அறுசுவையுடன் சமைத்து சாப்பிடுவது என்பது வழக்கம். அதாவது இந்த வழக்கம் நமது முன்னோர்களிடம் இருந்து நமக்கு வந்தது. அதனால் இதனை இன்றளவும் பின்பற்றி கொண்டு வருகின்றோம். அதேபோல் தான் ஆடி 18 அல்லது ஆடி பெருக்கு எனப்படுவதும் நமது தமிழ் நாட்டில் விடப்படும் ஒரு சுப நாள் ஆகும். அன்றும் நாம் அறுசுவையுடன் சாப்பாடு செய்து சாப்பிடுவோம். அதனால் அன்று இன்றைய பதிவில் கூறியுள்ள ஜவ்வரிசி பாயசத்தை செய்து சுவையுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் போகலாம்.
Sago Payasam Recipe in Tamil:
முதலில் இந்த ஜவ்வரிசி பாயசம் செய்வதற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம.
- ஜவ்வரிசி – 100 கிராம்
- பால் – 1/2 லிட்டர்
- சர்க்கரை – 100 கிராம்
- நெய் – 1 டேபிள் ஸ்பூன்
- முந்திரி – 15
- பாதாம் – 15
- திரட்சை – 15
- ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன்
- குங்குமப்பூ – 1 சிட்டிகை
- தண்ணீர் – 1/2 லிட்டர்
செய்யும் பொழுதே சுவைக்க தூண்டும் பீட்ரூட் கட்லெட் செய்வது எப்படி
Javvarisi Payasam in Tamil | ஜவ்வரிசி சேமியா பாயாசம் செய்வது எப்படி.?
செய்முறை:
ஸ்டேப் – 1
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 100 கிராம் ஜவ்வரிசியை நன்கு ஊறவைத்து கொள்ளுங்கள். பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 1/2 லிட்டர் தண்ணீரை ஊற்றி அதில் நாம் ஊறவைத்துள்ள 100 கிராம் ஜவ்வரிசியை சேர்த்து நன்கு வேகவைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 2
அது நன்கு வெந்த பிறகு நாம் எடுத்து வைத்துள்ள 1/2 லிட்டர் பால் மற்றும் 100 கிராம் சர்க்கரையை சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள்.
வீட்டில் பீட்ரூட் சேமியா இருக்கா அப்போ இதை செய்து பாருங்கள்
ஸ்டேப் – 3
மற்றொரு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய்யை சேர்த்து அதில் 15 முந்திரி, 15 பாதாம் மற்றும் 15 திரட்சை ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்து எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 4
இப்பொழுது நாம் வறுத்த முந்திரி, பாதாம் மற்றும் திரட்சையை கொதித்து கொண்டிருக்கும் பாயசத்தில் சேர்த்து கொள்ளுங்கள். இறுதியாக அதில் 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள் மற்றும் 1 சிட்டிகை குங்குமப்பூவை சேர்த்து இறக்கினால் நமது சுவையான ஜவ்வரிசி பாயசம் தயாராகிவிட்டது.
வாங்க சுவைக்கலாம்.. நீங்களும் இந்த ஜவ்வரிசி பாயசத்தை உங்கள் வீட்டில் செய்து சுவைத்து பாருங்கள்.
ஆடிப்பெருக்கு ஸ்பெஷல் காப்பரிசியை இப்படி செஞ்சு பாருங்க
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |