Javvarisi Vadam Recipe in Tamil
கோடை காலத்தில் சாப்பாட்டிற்கு வைத்து சாப்பிடும் தொட்டுக்கையாக பயன்படுத்துவது வத்தல் ஆகும். இதனை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். பொதுவாக வத்தலை இந்த கோடை காலத்தில் செய்வது வழக்கமானது. வடகத்தை கோடை காலத்தில் செய்து வைத்து பல வருடமாக வைத்து சாப்பிடுவது வழக்கமாகி விட்டது. இந்த பதிவில் எளிமையான முறையில் புதிய விதமான வத்தல் ஒன்றை செய்வதை பற்றி பார்க்க போகிறோம்.
தேவையான பொருட்கள் :
- ஜவ்வரிசி –1 கிலோ
- தண்ணீர் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
- சீரகம் – சிறிதளவு
- கறிவேப்பிலை – சிறிதளவு
- மிளகாய் விதை – சிறிதளவு
- வத்தல் – பேப்பர்
அனைவருக்கும் பிடித்த அரிசி வடகம் செய்வது எப்படி? | Arisi vadam recipe
ஜவ்வரிசி வத்தல் செய்முறை :
ஸ்டெப் : 1
முதலில் 1 கிலோ ஜவ்வரிசி எடுத்து தண்ணீரில் சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.அதன் பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீரை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். அதில் ஊற வைத்த ஜவ்வரிசியை சேர்த்து நன்றாக கிளறி விடவும். பின் அதனுடனே உப்பு, சீரகம் மற்றும் மிளகாய் விதை இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
ஸ்டெப் : 2
ஜவ்வரிசி வெந்த பிறகு மாவு பதம் வரும். இந்த நிலையில் அடுப்பை அணைத்து விடவும். ஜவ்வரிசி மாவு ஆறியதும், உங்களுக்கான விருப்பமான இடியப்ப உறையில் சேர்த்து கொள்ளவும். வெயிலில் ஒரு காட்டன் துணியை விரித்து கொள்ளவும். அதில் இடியப்ப உறையில் சேர்த்து பிழிந்து கொள்ளவும்.
ஸ்டெப் :3
ஒரு நாள் முழுவதும் அப்படியே வெயிலில் காய வைக்கவும். ஜவ்வரிசி நன்றாக காய்ந்தவுடன், அதன் மேல் லேசாக தண்ணீரை தெளித்து ஜவ்வரிசி வத்தலை எடுத்து கொள்ளலாம். அதனை எண்ணெயில் சேர்த்து பொறித்து எடுத்தால் மொறுமொறு ஜவ்வரிசி வத்தல் ரெடி.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |