Aloo Jeera Recipe In Tamil
பொதுவாக பலருக்கு பிடித்த வறுவல் தான் உருளைக்கிழங்கு வறுவல். இருந்தாலும் எல்லாருமே உருளைக்கிழங்கு வறுவலை ஒரே மாதிரி தான் வறுப்பார்கள். இருந்தாலும் உருளைக்கிழங்கை வித்தியாசமாக வறுத்து சாப்பிடு பாருங்கள். அவ்வளவு ருசியாக இருக்கும். உருளைக்கிழங்கை வித்தியாசமான முறையில் உங்களுக்கு வறுக்க தெரியாது என்றாலும் ஒரு பிரச்சனையும் இல்லை. இன்றைய பதிவில் கர்நாடக ஸ்பெஷல் ரெசிபியான ஜீரா ஆலு என்னும் வித்தியாசமான உருளைக்கிழங்கு வறுக்கும் முறையை பற்றி தான் பார்க்க போகிறோம். சரி வாங்க ஜீரா ஆலு எப்படி செய்வது என்று இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Jeera Aloo செய்ய தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 3
சீரகம் – 2 டீஸ்பூன்
இஞ்சி – சிறிதளவு
பச்சை மிளகாய் -2
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி – சிறிதளவு
எலுமிச்சை சாறு -1/2 தேக்கரண்டி (விரும்பினால்)
உப்பு – தேவைகேற்ப
சமையல் எண்ணெய் – தேவைகேற்ப
Aloo Jeera செய்முறை:
உருளைக்கிழங்கை சிறிதளவு உப்பு சேர்த்து வேகவைத்து, தோல் உரித்துக்கொள்ளவும்.
பிறகு உருளைக்கிழங்கை சிறிய சிறிய சதுரங்களாக வெட்டிக்கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் சமையல் எண்ணெயைச் சூடாக்கி கொள்ளவும். அதில் – 2 டீஸ்பூன் சீரகத்தைச் சேர்க்கவும். சீரகம் கருகிவிடாதவாறு பார்த்துக்கொள்ளவும்.
சீரகத்துடன் 1 டீஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் சிறுசிறுதுண்டாக நறுக்கிய பச்சை மிளகாய்களை சேர்த்து சில நொடிகள் வதக்க வேண்டும்.
பிறகு சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய் உடன் வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து சிறு நிமிடம் வதக்கவும். இப்போது உருளைக்கிழங்குடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சேர்த்து மசாலாவில் பச்சை தன்மை போகும்வரை வதக்கிக்கொள்ளவும்.
பிறகு அதனுடன் கொத்தமல்லி சேர்த்து குறைந்த தீயில் 2 நிமிடங்கள் வதக்கிக்கொள்ளவும்.
கடைசியாக சிறிதளவு கசூரி மேத்தி மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து கிளறவும்.
இப்போது சுவையான ஜீரா ஆலு தயார்!
ரெஸ்டாரண்ட் சுவையில் ஜீனி பட்டர் தோசை இனி உங்கள் வீட்டில்…
விழாக்களை சுவையானதாக மாற்றும் தஞ்சாவூர் ஸ்பெஷல் சோன் பாப்டி இனி உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்…
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |