Jini Butter Dosa Recipe in tamil
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக இருப்பது தோசை தான். சிலருக்கு தோசையை காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் உணவாக செய்து கொடுத்தாலும் அதனை விரும்பி சாப்பிடுவார்கள். இருப்பினும் சிலர் வீட்டில் வரும் மாவு தோசையை மட்டும் தான் ஊற்றி கொடுப்பார்கள். தோசையில் பலவகையான தோசை இருக்கிறது. அவற்றில் ஒரு வகையான ஜீனி பட்டர் தோசைக்கான செய்முறை விளக்கத்தை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம். இந்த தோசையை எப்படி செய்யலாம் என்று செய்முறை விளக்கத்தை பற்றி இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொண்டு உங்கள் வீட்டில் உள்ளவரக்ளுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்.
தேவையான பொருட்கள்:

கொத்தமல்லி – ஒரு கையளவு
முட்டைகோஸ் தேவைக்கேற்ப
பச்சை மிளகாய் – தேவைக்கேற்ப
தக்காளி – 2
வெண்ணை – தேவைக்கேற்ப
கரம் மசாலா – 1/2 ஸ்பூன்
வெங்காயம் – 3 பெரியாது
மிளகு தூள்- 1/2 ஸ்பூன்
பூண்டு – இரண்டு பல்
உப்பு – சிறிதளவு
சீரகம் தூள் – 1/2 ஸ்பூன்
தோசை மாவு – 1/2 கப்
எண்ணெய் தேவையான அளவு
ஜீனி பட்டர் தோசை செய்முறை
இரும்பு வாணலியை சூடாக்கி, எண்ணெய் தடவி வானொலியை சூடாக்கி தோசை மாவை ஒரு கரண்டி எடுத்து சமமாக பரப்பவும். 
தீயை குறைவாக வைத்து 30 விநாடிகள் சமைக்கவும்.
பிறகு வெங்காயம், மிளகுத்தூள், முட்டைக்கோஸ், தக்காளி, கொத்தமல்லி, ஆகியவற்றை சமமாக பரப்ப வேண்டும்.

சிறிது நேரத்திற்கு பிறகு வெண்ணெய் மற்றும் கரம் மசாலா சேர்க்கவும்.

பிறகு குறைவான தீயில் சமைக்க வேண்டும்.
பிறகு துருவிய சீஸ் தொடையில் சேர்த்த பின் மூடி, ஒரு நிமிடம் அல்லது சீஸ் உருகும் வரை சமைக்கவும்.

சீஸ் உருகிய பின்னர் தோசையை நான்கு கீற்றுகளாக வெட்டி, உருட்டி சூடாக பரிமாறலாம்.
| இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |















