இப்படி ஒரு ஊறுகாயை ஒரு முறையாவது செஞ்சு பாருங்க..

Advertisement

கிடாரங்காய் ஊறுகாய் செய்வது எப்படி.?

பொதுவாக ஊறுகாய் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். சாதத்திற்கு எந்த தொட்டுக்கையும் இல்லாவிட்டாலும் வெறும் ஊறுகாய் மட்டும் இருந்தாலே போதுமானது. அதை தொட்டுக்கிட்டே சாதத்தை சாப்பிட்டு விடுவோம். சில பேர் வீட்டில் ஊறுகாய் செய்வது அந்த தெருவே மணக்கும். சில பேர் என்ன தான் செய்தாலும் அதிலிருந்து ருசி அவ்வளவாக இருக்காது. பெரும்பாலும் இன்றைய காலத்தில் உள்ளவர்கள் ஊறுகாயை வீட்டில் செய்யாமல் கடையில் விற்கும் ஊறுகாயை தான் வாங்கி சாப்பிடுகிறார்கள். இதில் கெமிக்கல் கலந்திருக்கும் அதனால் வீட்டிலேயே ஊறுகாய் செய்து சாப்பிட வேண்டும். எப்படி செய்வது என்று தெரியவில்லை என்றால் நம் பதிவில் எல்லா வகையான ஊறுகாயும் எப்படி செய்வது என்று பதிவிட்டுள்ளோம். இந்த பதிவில் கிடாரங்காய் ஊறுகாய் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கிடாரங்காய் ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை:

கிடாரங்காய் ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள் கிடாரங்காய் ஊறுகாய் செய்முறை
கிடாரங்காய்-2 முதலில் கிடாரங்காய் எடுத்து முதல் நாள் இரவே நறுக்கி விட்டு உப்பு சேர்த்து பிசறி ஊற வைத்து கொள்ளவும்.
மிளகாய் தூள்- தேவையான அளவு கடாய் வைத்து அதில் வெந்தயம் 2 தேக்கரண்டி சேர்த்து வதக்கி விட்டு பொடியாக அரைத்து கொள்ளவும்.
மஞ்சள் தூள் – 1/ 2 ஸ்பூன் மறுநாள் காலையில் ஊறவைத்த கிடாரங்காவுடன் மிளகாய் தூள் சேர்த்து பிசறவும்.
உப்பு- தேவையான அளவு அதன் பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு 1 தேக்கரண்டி சேர்த்து கடுகு பொரிந்ததும், பூண்டு 10 பற்களையும் சேர்த்து கொள்ளவும். அதனுடன் பிசறி வைத்த கிடாரங்காவையும் சேர்க்க வேண்டும்.
வெந்தயம் – 2 ஸ்பூன் அதன் பிறகு பெருங்காய தூள், வெந்தய தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். எண்ணெய் போதவில்லை என்றால் இன்னும் கொஞ்சம் ஊற்றி கொள்ளலாம். எண்ணெய் அதிகமாக ஊற்றினால் தான் ஊறுகாய் நல்லா இருக்கும்.
கடுகு – 1 ஸ்பூன் ஊறுகாயில் சேர்க்கப்பட்ட மசாலாக்களின் பச்சை வாசனை போன பிறகு சிறிதளவு வெல்லம் சேர்த்து கிளறி விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
பூண்டு-10 ஊறுகாய் ஆறிய பிறகு கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து ஒரு மாதம் வரைக்கும் பயன்படுத்தி கொள்ளலாம்.

அப்பப்பா நாவூறும் முருங்கைக்காய் வறுவல் இப்படி செஞ்சு பாருங்க

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement