வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உணவை சத்தானதாகவும் சுவையானதாகவும் மாற்ற கூடிய காய்கறி சட்னி..

Updated On: August 8, 2023 12:54 PM
Follow Us:
kaykari chatney recipe in tamil
---Advertisement---
Advertisement

சத்தான மற்றும் சுவையான காய்கறி சட்னி செய்முறை

பொதுவாக காலை மற்றும் இரவு உணவுகளாக இட்லி மற்றும் தோசைதான் சாப்பிடுவோம் அதற்கு ஏற்ற சட்னியை  தினமும் புதிது புதிதாக செய்வதற்கு உங்களுக்கும் ஆசையாகத்தான் இருக்கும் ஆனால் நம் அந்த நேரத்தில் மிகவும் ஈசியாக செய்யக்கூடிய சட்னியை தயார்செய்துவிடுவோம். ஆனால் அது நமக்கு சத்துக்களை தருகின்றதா என்றால் சந்தேகம் தான். சத்துள்ள பொருட்களை சாப்பிட வேண்டும் என்று நினைத்தாலும் ஒரு சில உணவுப் பொருட்களை நம் கண்ணுக்கு தெரிந்தே ஒதுக்கி விடுகின்றோம். வீட்டில் பெரும்பாலான குழந்தைகள் காய்களை ஒதுக்கிவிடுகின்றன. இவற்றிக்கு எல்லாம் தீர்வாக இன்று காய்கறிகளை கொண்டு சட்னி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்…

காய்கறி சட்னி செய்முறை:

தேவையான பொருட்கள்:

எண்ணெய் – 1 டீஸ்பூன்
வெங்காயம் – 1 சிறியதாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 4 முதல் 5
இஞ்சி – 1 அங்குல துண்டு நறுக்கியது
பூண்டு – 5 பல்
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
தக்காளி – 1 பெரியதாக நறுக்கியது
கேரட் – 1 நடுத்தர அளவு நறுக்கியது
பீன்ஸ் – 10 நறுக்கியது
காலிஃபிளவர் – 1 கப் நறுக்கியது
புதிய கொத்தமல்லி இலைகள் – ½ கப்
புளி கூழ் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிப்பிற்கு தேவையான பொருட்கள்:

எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு  – 1 டீஸ்பூன்
உளுந்து – 1 டீஸ்பூன்
சீரகம்  – 1 டீஸ்பூன்
பெருங்காயம் – 1⁄4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 1

கேரளா ஸ்டைல் கடலை கறி சாப்பிட்டா டேஸ்ட் நாக்குலேயே இருக்கும்..!

செய்முறை: 

அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்த உடன் எடுத்து வைத்துள்ள கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், பெருங்காயம் மற்றும் சிவப்பு மிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

kaykari chatney recipe intamil

உளுத்தம் பருப்பு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

அதே கடாயில், வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.

காய்கறி சட்னி

பின்பு கேரட், பீன்ஸ், காலிஃபிளவர் மற்றும் உங்கள் விருப்பமான காய்கறிகள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.  காய்கறிகள் வதங்கிய உடன், நறுக்கிய தக்காளி, கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை, கரைத்து வைத்துள்ள புளி சாறு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.

kaykari chatney in tamil

அடுப்பை அணைத்துவிட்டு வதக்கிய பொருட்களை சிறிது குளிர விடவும்.

காய்கள் ஆறியதும், காய்த்த மிளகாய் மற்றும் உளுத்தம்பருப்பு சேர்த்து அரைக்கவும்.

kaykari chatni recipe

மென்மையாக அரைத்த கலவையை வேறு பாத்திரத்தில் மாற்றிக்கொள்ளவும்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து போதுமான அளவு எண்ணெயை ஊற்றி, எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய் மற்றும் பெருங்காயம் ஆகியவற்றைப் பொறித்து, அரைத்து வைத்துள்ள சட்னியின் மேல் ஊற்றி நன்கு கலக்கவும்.
kaykari chatni final stage

இப்போது சுவையான காய்கறி சட்னி தயாராகிவிட்டது.

kaykari chatni in tamil

இந்த காய்கறி சட்னியை சாதம், சப்பாத்தி, பராத்தா அல்லது இட்லி தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம்.

இந்த காய்கறி சட்னியை உங்கள் வீட்டிலும் செய்துபாருங்கள்….

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal

 

Advertisement

Sureka

நான் சுரேகா pothunalam.com தளத்தில் Content creator ஆக இருக்கின்றேன். நான் Life Style, Business, Banking போன்ற தகவல்களை இந்த தளத்தின் வழியை எழுதி வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

easy rava laddu recipe in tamil

விநாயகர் சதுர்த்திக்கு இந்த லட்டு செஞ்சு பாருங்க.. அப்படி ஒரு சுவை..

Ellu Kozhukattai Recipe in Tamil

இந்த விநாயகர் சதுர்த்திக்கு மிகவும் ருசியான எள்ளு கொழுக்கட்டையை செய்து சுவைத்து பாருங்க..!

விநாயகர் சதுர்த்திக்கு இந்த போளியை செய்து பாருங்கள்.. சூப்பரா இருக்கும்..

vinayagar chaturthi special food in tamil

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் கொழுக்கட்டை | Vinayagar Chaturthi Special Food in Tamil..!

vinayagar sathurthi special recipes nippattu in tamil

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் மொறு மொறு தட்டை அருமையான சுவையுடன்….

Shrikhand Sweet Recipe in Tamil

கோகுலாஷ்டமி ஸ்பெஷல் ஸ்ரீகந்த் இனிப்பு செய்வது எப்படி தெரியுமா..?

கண்ணனுக்கு பிடித்த வெண்ணெயுடன்…கிருஷ்ண ஜெயந்தி Special பாதாம் கீர்

கேரளாவின் ஓணம் ஸ்பெஷல் காரம் மற்றும் புளிப்பு சுவைக்கொண்ட இஞ்சிப்புளி

aadi 18 special food in tamil

ஆடிப்பெருக்கு ஸ்பெஷல் காப்பரிசியை இப்படி செஞ்சு பாருங்க..