Kalyana Mango Pickle Recipe in Tamil
ஊறுகாய் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. எவ்வளவு விதவிதமான கூட்டு பொரியல் இருந்தாலும் சிறிதளவு ஊறுகாய் தொட்டு சாப்பிட்டால் தான் சாப்பிட்டது போல் இருக்கும். அந்த அளவிற்கு ஊறுகாய் என்பது அனைவருக்கும் பிடித்த ஒன்றாக இருக்கிறது. ஊறுகாயில் பல வகைகள் உள்ளது. ஆனால் ஊறுகாய் என்றதும் நம் நினைவிற்கு வருவது பூண்டு ஊறுகாய், எலுமிச்சை ஊறுகாய் மற்றும் மாங்காய் ஊறுகாய். என்னதான் நாம் வீடுகளில் ஊறுகாயில் செய்தாலும் இந்த கல்யாண வீடுகளில் செய்கின்ற ஊறுகாயின் சுவையும் மணமும் வருவதில்லை. எனவே உங்களுக்கு கல்யாண வீடுகளில் செய்கின்ற மாங்காய் ஊறுகாய் ரொம்ப பிடிக்கும் என்றால் இப்பதிவை படித்து நீங்களும் வீட்டிலேயே சுவையான கல்யாண வீட்டு மாங்காய் ஊறுகாய் செய்து சாப்பிடுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
கல்யாண வீட்டு மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி.?
தேவையான பொருட்கள்:
- மாங்காய் – 1
- கடுகு – 2 ஸ்பூன்
- நல்லெண்ணெய் – 3 ஸ்பூன்
- மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
- பெருங்காய பவுடர் – 1/4 ஸ்பூன்
- வெந்தயம் – 1/2 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை:
ஸ்டேப் -1
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 1/2 ஸ்பூன் வெந்தயம் மற்றும் 1 ஸ்பூன் கடுகை சேர்த்து பொரிய விட்டு நிறம் மாறியதும் இறக்க வேண்டும்.
ஸ்டேப் -2
இதனை சிறிது நேரம் உலரவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து கொள்ள வேண்டும்.
ஸ்டேப் -3
அடுத்து, மாங்காயை நன்றாக கழுவி சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளுங்கள். இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காய தூள், அரைத்து வைத்த கடுகு பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -4
இதை அனைத்தையும் நன்றாக பிசைந்து கொள்ளுங்கள. அதாவது மாங்காயில் மசாலா அனைத்தும் நன்றாக படும்படி கிளறி 5 நிமிடம் ஊறவிடுங்கள்.
இப்படி ஒரு ஊறுகாயை ஒரு முறையாவது செஞ்சு பாருங்க..
ஸ்டேப் -5
அதன் பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும் அதில் கடுகு போட்டு பொரிய விடுங்கள்.
ஸ்டேப் -6
அடுத்து இதில் ஊறவைத்துள்ள மாங்காயை சேர்த்து கிளறி விட்டு இறக்கினால் சுவையான கல்யாண வீட்டு மாங்காய் ஊறுகாய் தயார்.!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |