அப்பப்பா நாவூறும் கர்நாடக ஸ்டைல் தக்காளி சட்னி செய்து பாருங்க..

Advertisement

Karnataka Style Tomato Chutney

இட்டலி, தோசை போன்ற டிபன் உணவுகளுக்கு சட்னி, சாம்பார், பொடி போன்ற ஏதாவது ஒரு சைடிஷ் போன்றவை செய்ய வேண்டியிருக்கும். அப்படி நாம் அடிக்கடி செய்வது தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, பூண்டு சட்னி, பொடி, கொத்தமல்லி சட்னி, புதினா சட்னி போன்றவை தான் செய்வோம். ஒரே மாதிரியாக செய்வது செய்பவர்களும் சரி, சாப்பிடுகிறவர்களுக்கும் சரி அழுத்து போகிவிடும். அதனால் தான் இந்த பதிவில் கர்நாடக ஸ்டைலில் தக்காளி சட்னி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள போகின்றோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கர்நாடக தக்காளி சட்னி செய்ய தேவையான பொருட்கள்: 

  • தக்காளி- 3
  • வெங்காயம்-1
  • மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி
  • ரசம் பவுடர்- 1/2 தேக்கரண்டி
  • பெருங்காய தூள்- சிறிதளவு
  • மஞ்சள் தூள்- சிறிதளவு
  • சர்க்கரை- சிறிதளவு
  • மிளகாய் தூள்- 1/2 தேக்கரண்டி
  • பூண்டு-2 பற்கள்
  • எண்ணெய்- 2 தேக்கரண்டி
  • கடுகு- 1/2 தேக்கரண்டி
  •  கருவேப்பிலை-சிறிதளவு

கர்நாடக தக்காளி சட்னி செய்முறை: 

கர்நாடக தக்காளி சட்னி

முதலில் ஒரு வெங்காயம், 3 தக்காளி எடுத்து சிறியதாக நறுக்கி கொள்ளவும். இதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்க்கவும். பின் இதனுடன் 2 பற்கள் பூண்டு, 1/2 தேக்கரண்டி ரசம் பவுடர், 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள், தேவையான அளவு, சிறிதளவு சர்க்கரை சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும்.

பின் அடுப்பில் கடாய் வைத்து அதில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும், 1/2 தேக்கரண்டி கடுகு சேர்த்து பொரித்து கொள்ளவும். பிறகு கருவேப்பிலை சிறிதளவு, மஞ்சள் தூள் சிறிதளவு, பெருங்காய தூள் சிறிதளவு சேர்த்து அதனுடன் அரைத்து வைத்த சட்னியையும் சேர்த்து கொதிக்க விடவும்.

அடுப்பை குறைவான தீயிலே வைத்து 5 நிமிடத்திற்கு கொதிக்க விடவும். அதன் பிறகு வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி அனைவருக்கும் பரிமாறி சுவைத்து பாருங்கள்.

இது போன்ற ரெசிபியை பற்றி தெரிந்து கொள்ள எங்களது தளத்தை பின் தொடர்க.

5 நிமிடத்தில் செய்யக்கூடிய கார சட்னி இன்னைக்கே செஞ்சு பாருங்க..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement