Karthigai Deepam Sweet Appam Recipe in Tamil | கார்த்திகை தீபம் அப்பம்
2024-ஆம் ஆண்டிற்கான பண்டிகை காலங்கள் தொடந்து ஒன்று ஒன்றாக வரும் பட்சத்தில் தற்போது தான் தீபாவளி பண்டிகை முடிவடைந்த நாட்கள் 10 நாட்களிலேயே அடுத்த பண்டிகை வந்து விட்டது. அதாவது கார்த்திகை தீபம் வருகிறது. அந்த வகையில் 2024-ஆம் ஆண்டிற்கான கார்த்திகை தீப திருநாள் 13.12.2024 அன்று வெள்ளிக்கிழமை வருகிறது. ஆகவே நாளைய நாள் தான் கார்த்திகை தீப திருநாளாக இருந்தாலும் கூட இன்றே வீடுகளில் விளக்கு ஏற்றுவீர்கள். அந்த வகையில் கார்த்திகை அன்று வீடுகளில் அகல் விளக்கு ஏற்றுவதோடு மட்டும் இல்லாமல் இனிப்பு வகைகளையும் செய்து பூஜை செய்வார்கள். எனவே இன்றைய பதிவில் கார்த்திகை தீபம் ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க.!
கார்த்திகை தீபம் அப்பம் செய்முறை:
பொருட்களின் அளவு | செய்முறை விளக்கம் |
வெல்லம்- 150 கிராம் | முதலில் கடாயில் வெல்லம் கரையும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து அதனுடன் வெல்லத்தை சேர்த்து நன்றாக கரைய விட்டு வெல்லப்பாகு தயாரானவுடன் இறக்கி வைத்து விடுங்கள். |
ரவா- 1 கப் | இப்போது ஒரு பாத்திரத்தில் 1 கப் ரவை மற்றும் வெல்லப்பாகு சேர்த்து நன்றாக கலந்து 10 நிமிடம் வரை அப்படியே வைத்து விடுங்கள். |
துருவிய தேங்காய்- 1/2 கப் | 10 நிமிடம் கழித்து ஒரு மிக்சி ஜாரில் பிசைந்து வைத்துள்ள மாவு, 1/2 கப் தேங்காய், சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளுங்கள். |
அரிசி மாவு- 1/4 கப் | அடுத்து ஒரு பவுலில் அரைத்து வைத்துள்ள மாவு மற்றும் அரிசி மாவு, உப்பு, ஏலக்காய் தூள், நெய் சேர்த்து நன்றாக கலந்து அப்படியே 10 நிமிடம் வைத்து விடுங்கள். |
உப்பு- சிறிது | |
ஏலக்காய்த்தூள்- 1/2 ஸ்பூன் | |
எண்ணெய்- தேவையான அளவு | கடைசியாக கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து ஒரு கரண்டியால் மாவினை எடுத்து எண்ணெயில் போட்டு பொன் நிறமாக பொரித்து எடுக்க வேண்டும். |
ரவை அப்பம் தயார் | இதேபோல் மற்ற மாவினையும் ஒன்று ஒன்றாக பொரித்து எடுத்தால் கார்த்திகை தீபம் அப்பம் தயார். |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |