பொரி உருண்டை செய்வது எப்படி.? | Karthigai Pori Urundai Recipe in Tamil
கார்த்திகை என்றால் நினைவிற்கு வருவது விளக்கிற்கு அடுத்தது பொரி தான் ஞாபகத்திற்கு வரும். இந்த பொரியை ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு மாதிரியாக செய்வார்கள். சில பேர் சவத்து போனது போல இருக்கும், சில பேர் வீட்டில் மொறுமொறுன்னு இருக்கும். ஆனால் பெருபாலானவர்கள் வீட்டில் பொரியை உதிரி உதிரியாக தான் செய்திருப்பார்கள். யாரும் உருண்டையாக செய்து சாப்பிட மாட்டார்கள். அதனால் தான் இந்த பதிவில் பொரி உருண்டை செய்வது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..
பொரி உருண்டை செய்ய தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை:
தேவையான பொருட்கள் |
செய்முறை |
பொரி- 4 கப் |
முதலில் ஒரு கப் சர்க்கரைக்கு 4 கப் பொரி தேவைப்படும். அதனால் நான் 4 கப் பொரி எடுத்துள்ளேன். |
சர்க்கரை- 1 கப் |
பிறகு சர்க்கரை பாகு செய்ய வேண்டும். அதற்கு ஒரு பாத்திரத்தில் 1 கப் சர்க்கரையை சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்ற வேண்டும். இதனுடன் ஏலக்காய் தூள் சிறிதளவு, உப்பு சிறிதளவு சேர்த்து கொதிக்க விட வேண்டும். |
ஏலக்காய் தூள்-சிறிதளவு |
பாகு நன்றாக கெட்டியாக வர வேண்டும். பின் இதனை ஒரு சொட்டு எடுத்து தண்ணீரில் விட வேண்டும். அப்போது அதனை எடுத்து பார்த்தால் பளிங்கு போலவும் கொஞ்சம் அழுத்தமாகவும் இருக்க வேண்டும். அப்போது அடுப்பை அணைத்து விடவும். |
நெய்- 2 தேக்கரண்டி |
பின் இதில் சிறிதளவு நெய் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இதனுடன் பொறியை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும். பாகுவில் பொரி நன்றாக மிக்ஸ் ஆகிருக்க வேண்டும். |
உப்பு- தேவையான அள்வு |
அதன் பிறகு கையில் அரிசி மாவு அப்ளை செய்து பொரியை உருண்டைகளாக பிடிக்க வேண்டும். |
கார்த்திகை தீபம் அப்பம் செய்முறை விளக்கம்..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> |
சமையல் குறிப்புகள்!!! |